மன இறுக்கமும் கோபமும் தொழிலில் வெற்றியைத் தராது!

ஒவ்வொரு தொழிலிலும் தற்போதைய கடுமையான போட்டிகள் பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குப் பின்பு லாபம் பெறும் வரை நீண்ட ஒரு தொடராக நம்மை பிரமிக்க திணற வைக்கிறது. தொழில் போட்டிகளில் மன இறுக்கமும், கோபமும் ஏற்படாத நபர்கள் என்று கணக்கிட்டால் ஒரு சிலர் மட்டுமே தேறுகிறார்கள்.


நம்முடைய சமூக பொருளாதார வளர்ச்சி பாவலர் வேகத்திற்கு நம் மனவளர்ச்சி ஈடுகொடுக்க இயலாத பொழுது நமக்கு இந்த டென்ஷன் (இறுக்கம்) ஏற்படுகிறது. இறுக்கம் நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்கு பாதிப்பைத் தருகிறது.


 இறுக்கத்தை எதிர் கொள்ளாமல் வாழ்வில் ஒரு சிறு முன்னேற்றம் கூட காண இயலாது. இன்றைய காலக்கட்டத்தில் வளர்ச்சியின் ஒரு அங்கமாகி நம்மை சவால் விடுவது இறுக்கம் தான். இறுக்கம் எவ்வாறு எதனால் எல்லாம் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்...


1. வியாபாரத்தில் நஷ்டம்


2. சாதிக்க இயலாத இலக்குகள்


3. திறமையற்ற வேலையாட்கள்


4. விபத்து (அல்லது) உயிரிழப்பு


5. உடலியக்கத்தை இழக்கச் செய்யும் திடீர் விபத்து, நோய்.


6. அதிக பணிச்சுமை (அல்லது) நேரம் போதாமை.


7. குடும்பப் பிரச்சனைகள்


8. இயற்கைப் பேரழிவு


மிக நெருக்கமானவர்களின் தவறான நடத்தை, தவறான குற்றச்சாட்டு,-தவறாக புரிந்து கொள்ளப்படுதல், சக்திக்கு மீறிய செலவினங்கள், கடன்கள்.


                                   


மேற்கூறிய காரணங்கள் மன இறுக்கம் ஏற்படுவதற்கு தூண்டும் காரணிகள் ஆகும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண தொழிலில் வெற்றி பெறுவதற்கு மேற்கண்ட காரணிகளை அலசி ஆராய்ந்து தீர்வு கண்டு இறுக்கம் அற்ற அல்லது குறைந்த நிலை மிகவும் அவசியம்.


தொழிலில், வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்பது எல்லோரது ஆசையும் கூடத்தான் அதற்காக சக்திக்கு மீறிய ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு, வளர்த்துக் கொண்டு இலக்கு நிர்ணயித்து செயல்படுவது தவறு. நமது த நிறுவனத்தில் வளர்ச்சி நிலையில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்.


அப்போதைய சூழலுக்கு தொழிலாளர்கள் திறன், உழைப்பு, சந திறன், உழைப்பு, சந்தையில் பொருளின் தேவை, அதன் பயன்பாட்டின் மறுசுழற்சி காலம், என்று அனைத்தையம் அலசி முடிந்தால் தொழில் நுட்ப வல்லுநர் களுடன் ஆலோசனைகளைப் பெற்று இலக்கு நிர்ணயிப்பதுதான் இறுக்கத்தைக் குறைக்க மட்டுமல்ல தொழிலில் லாபத்தை அதகரிப்பதற்கும் மிகச் சிறந்த வழியாகும்.


ஒருவன் மன இறுக்கம் அடையத் துவங்குகிறான் எனில் இறுக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே சில விஷயங்கள் மூலம் அதனை அறிந்து கொள்ள வேண்டும்.


1. கவனம் குறைதல்.


2. ஆர்வமின்மை


3. உடலில் சக்தி இன்மை


4. தூக்கம் கெடுதல்


5. தலைவலி


6. வாழ்வில் பிடிப்பின்மை.


மேற்கண்ட பிரச்சனைகள் ஒருவன் உணர ஆரம்பித்தால் இறுக்கம் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதனால் உடலும், தொழிலும் கெட்டு விடும். ஆகவே இறுக்கம் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்று யோசிக்க ஆரம்பிக்க வேண்டும் காரணம் தெரிந்து கொண்டு வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும்.


நமது உடல் நம் இறுக்கத்தை குறைப்பதில் பெரும்பாலான பங்களிப்பினைத் தருகிறது. காலையில் எழுந்த உடன் காலைக் கடன் களை முடித்து விட்டு சிறிய அளவு உடல் பயிற்சியாக மெது ஓட்டம், நடைப்பயிற்சி என்பதுடன் ஏதேனும் ஒரு விளையாட்டு என தினசரி காலையில் அல்லது மாலையில் செய்து வரலாம். மேலும் மனம் சார்ந்த விஷயங்களுக்கு தியானம், சிந்தனை, கருத்தொன்றி இருக்கும் பயிற்சிகளும் உதவும்.


நம்முடைய வாழ்க்கை முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் நண்பர்களை தேர் தெடுத்து அவர்களுடனும் நமது குடும்ப உறுப்பினர்களுடனும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பேசி மகிழும் வண்ணம் நேரம் ஒதுக்கி அளாவிட வேண்டும்.


இதன் மூலம் நமது செயல்களில் முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படும் வண்ணம் ஏதும் காணப்பட்டால் அவர்கள் நம்மிடம் எடுத்துச்சொல்லும் சூழல் அமைவதால் நாமும் அதனைச் சரி செய்து இறுக்கத்தினை வராமல் செய்து விடலாம்.


ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்ற நெருக்கடி அமைந்தால் அவசரப்படாமல் வேலைகளின் தன்மையைப் பொறுத்து வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக அழைத்து கவனிக்கும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள். ஒரு சமயத்தில் ஒன்றைச் செய்து நன்றாக செய்து முடிக்கவும்.


அன்றைக்குரிய வேலைகள் என்ன என்பதை பட்டியலிட்டு செயல் படுத்த முயற்சித்தால் இறுக்கம் தவிர்க்க இயலும். வாழ்வில் அந்தந்த காலக்கட்டத்தில் வருவதை தயக்கமின்றி, துணிவு கொண்டு எதிர்கொள்ளுதல் மூலமும் இறுக்கத்தைக் குறைக்க முடியும்.


இறுக்கத்தின் மூல காரண மாக இரண்டு காரணங்கள் தான் ஒன்று இறந்த கால இழப்புகள் பற்றி வருந்துதல், இரண்டாவது எதிர்கால பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுதல்.


இவை இரண்டையும் தவிர்த்து நாம் நிகழ் காலத் தவிர்த்து நாம் நிகழ் காலத் தையே சார்ந்து மிகுதியாக இயங்கும் வண்ணம் நம் வாழ்க்கையை தொழிலைக் கொண்டு செல்ல வேண்டும். தொழில் நேர்மையானவராக, நல்லவராக இருப்ப தான் அதிகம் கெடுதல்தான் என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் இது தவறு நல்ல குணங்கள் நாம் வாழ்வை, தொழிலை இயல்பாக அமைக்கும் நல்ல குணங்களும், நல்ல அணுகுமுறைகளும் இல்லாமையே 34 இறுக்கத்திற்கு காரணம் என்று உறுதியாகக் கூறலாம்.


எப்பொழுதெல்லாம் நாம் விரும்பும் வண்ண மே நடப்பது இல்லை. அது போல உலகில் அனைத்து நிகழ்வுகளும் நிலையானவை அல்ல என்று நீங்கள் சிந்திக்கப்பழக வேண்டும். இது கசப்பான உண்மை தான்.


ஆனால் கசப்புக்குப் பின்பு இனிப்பு இன்னும் இனிமை ஊட்டும், மாறுபாடு இல்லையேல் வாழ்வு சுவைக்காது. நாம் குறிக்கோள் ஒன்றினை முன்னிறுத்தி வாழும் பொழுது இறுக்கமும் மறைந்து விடும் என்பதைவெற்றிபெறும் சமயம் உணர இயலும்.                - G.B.முருகன்.


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image