பொங்கல் விற்பனையில் களை கட்டும் இளம்பிள்ளை 'அபூர்வா பட்டு சேலைகள்!

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எப்போதுமே சேலத்தை அடுத் துள்ள இளம்பிள்ளை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே 'அபூர்வா' பட்டு மற்றும் சில்க் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி மிகவும் சுறுசுறுப்பாக நடை பெற்று வந்தது.


                              பல்வேறு ரகத்தயாரிப்புகள்:


மேலும் இவை உடனுக்குடன் உற்பத்தி செய்யப்பட்ட வேகத்திலேயே அவ்வப்போது விற்பனைக்காக தமிழகம் முழுவதுமுள்ள கடைகளுக்கு அனுப்பட்டது. ஏனெனில் இளம்பிள்ளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கவில் தயாரிக்கப்படும் அபூர்வா பட்டு, காட்டன் கான் சேலைகளுக்கு உள்ள வரவேற்பு அப்படி. 


தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, திருப்பூர், பள்ளிப் பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்சறிகள் உள்ளன.


இந்த விசைத் தறிகளில் ஏற்றுமதி ரகங் களான காட்டன் ஜவுளிகள், அபூர்வா சேலை, சில்க் காட்டன், காட்டன் சேலை, டவல், கேரளா சேலை, வேட்டி, லுங்கி, காடா உள்பட பற்பல ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


                                 


                                   தயாரிப்பும், விற்பனையும்:


இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரகங்களும் இந்தியா வின் பல பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


செய்யப்படுகிறது. இது பற்றிய விவரங்களை செய்தியாளள்களுக்கு விளக்க மாகத் தந்த இளம் பிள்ளையைச்சேர்ந்த சேலை உற்பத்தியாளர்கள்.


தமிழகத்திலேயே அபூர்வா பட்டுச் சேலைக்கு இளம்பிள்ளைதான் புகழ் பெற்ற இடமாகும். இளம்பிள்ளை பகுதியைச் சுற்றி புளள இடம் யுள்ள இடங்கண் சாலை, வேம்படிதாளம், அரியானூர், சீரகாபாடி, தாரமங்கலம், - ஜலகண்டாபுரம், ஓமலூர், எட்டிக் குட்டை மேடு உள்பட பல பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன.


இந்த பகுதிகளில் 5 லட்சத்திற்கும் மேற் பட்ட விசைத்தறிகள் உள்ளன. இங்கு விசைத்தறிகளில் நதியா செக்டு, சாமுத்ரிகா எம்போஸ், நயன்தாரா விஸ்வாசம், ரேவதி பைப்பிங், அபூர்வா சில்க் காட்டன், கரிஷ்மா பட்டு, கல்யாணி பட்டு, கல்யாணி காட்டன் உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் செல்கின்றன.


மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்பட தமிழர்கள் வசிக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் நாடுகளுக்கும் ஏற்றுமதி படுகின்றன. இதனால் இளம் பிள்ளையில் ஆண்டு முழுவதும் அபூர்வா பட்டுச் சேலை, காட்டன் சேலைகள் உற்பத்தி இருந்து கொண்டே இருக்கும்.


                                    வசதிக்கேற்ற விலையில் .....


முக்கியமாக பெண்கள் அதிகம் விரும்பி அணியும் ரகமாக கரிஷ்மா பட்டு, சில்க் காட்டன் போன்ற ரகங்கள் இருக்கின்றன. சில்க் காட்டன் சேலையை அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் அதிகம் விரும்புகின்றனர்.


ஒரு சேலை ரூ.300 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கலைத் தொடர்ந்து வரும் கோடை காலத்தை முன்னிட்டு காட்டன் சேலைகள் எடுக்க விரும்பும் பெண்கள் பொங்கல் திருவிழாவை ஒட்டி அதை அதிகமாக வாங்குகின்றனர்.


குறிப்பாக பொங்கல் திருவிழா காலங்களில் எங்கள் தயாரிப்புகளை சேலைகளின் விற்பனை மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, சென்னை போன்ற பகுதிகளில் உச்சத்தை எட்டும் என்றனர்.


முக்கியமானது வசதி படைத் தோர் முகூர்த்தங்களில் பெண்க ளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1லட்சம் வரை முகூர்த்த பட்டுச் சேலை எடுக்கின்றனர். வசதி குறைவானவர்கள் இளம்பிள்ளை குறைவானவர்கள் இளம்பிள்ளை முகூர்த்தச் சேலைகளை வாங்கி முகூர்த் தங்களில் பயன்படுத்துகின்றனர்.


சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலானவர்கள் திருமணத்திற்கு அசல் பட்டுப் புடவைதான் வாங்குவார்கள். ஆனால் தற்போது அபூர்வ பட்டுசேலையை அவர்கள் வாங்குவதால் அதன் விற்பனை 40 சதவீதம் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் விற்பனையாளர்கள்.


                                                                                 - தொழில் முனைவோன்.


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image