அனைத்து தண்ணீர் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு தருகிறோம் கிருஸ்டல் கிளியர் வாட்டர் சொல்யூஷன்ஸ் இயக்குநர் டாக்டர்.எஸ்.முருகேசன் நேர்காணல்!

தண்ணீர் தான் எல்லாப் பொருளையும் சுத்தப்படுத்துகிறது. மனிதனுக்கு தேவை யான சக்தியையும் தருகிறது. ஆனால் அதே தண்ணீரால் தான் தொற்று நோய்களும் அதிகம் பரவுகின்றன. இதனைத்தவிர்க்கத்தான் நம்மில் பலர் கேன் வாட்டர்களை வாங்கிக் குடிக்கிறோம்.


                                           


பொதுவாக குடிநீர் குழாயில் வரும் தண்ணீ ரில் 7 என்ற அளவில் பிஎச் அளவு இருக்கும். அந்த வகையில் 7முதல் 8 என்ற அளவில் பிஎச் அமைந்திருந்தால் அந்த நீரை குடிநீருக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அளவில் இருக்கும் தண்ணீரை நாம் பயன்படுத்தினால் அது உடல் உறுப்புகளை பாதிக்காது.


ஆனால் தண்ணீ ரில் இந்த பிஎச் என்ற தர அளவு மட்டும் போதுமா என்றால் அதுதான் இல்லை. இதில் இன்னும் கூடுதலான விவரங்கள் இருக்கின்றன. அவை சரியாக இருந்தால் மனிதனின் வாழ்நாளும் கூடும் என்கிற தகவல்களும் உண்டு. ஆக தண்ணீர் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடல் நலத்துக்கு ஏற்றது


இப்படி தண்ணீரால் வரும் அனைத்து விதமான சிக்கல்களுக்கும், முழுமையான தீர்வு தருகிறது சென்னை கிருஸ்டல் கிளியர் வாட்டர் சொல்யூசன்ஸ் நிறுவனம். இவர்களுடன் ஓயாசிஸ் வாட்டர் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது. இவர்கள் அமைத்துத்தரும் இண்டகரேட்டட் ஆர்கானிக் வாட்டர் பிளாண்ட் மூலம் அனைத்து விதமான தண்ணீர் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது என்கின்றனர் இந்த நிறுவனத் தினர். அது எப்படி அனைத்து தண்ணீர் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு? இது குறித்து தெளிவாகத் தெரிந்து கொள்ள சென்னை கொளத்தூரில் உள்ள அவர்களது நிறுவனத்திற்குச் சென்றோம்.


அங்கு சி.சி.வாட்டர் சொல் யூசன்ஸ் நிறுவனர் டாக்டர்.எஸ்.முருகேசன் மற்றும் துணை நிறுவனமான ஓயாசிஸ் வாட்டர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரேம் சுந்தர் ஆகியோர் நமக்கு கூட்டாக பேட்டியளித்தனர். இதோ நம் வாசகர்களுக்காக அவர்கள் அளித்த பதிலிலிருந்து சிலபகுதிகள்.


சுத்தமான தண்ணீர், சுத்தமான தண்ணீர் என்கிறீர்கள். தண்ணீ ரில் அப்படி என்னசார் பிரச்சனை வந்துவிடப்போகிறது?


தண்ணீரால் பரவும் நோய்களால்தான் மனிதன் அதிகமாக உயிரிழக்க நேரிடுகிறது.


இந்த தண்ணீரைப்பற்றி முழுமையான தகவல்களை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் அதுதான் இல்லை. அதேபோல் அதனை சுத்தமான நீராக பயன்படுத்த வேண்டும் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்தாலும் அதனை எந்த வகையில் கிடைக்கும் என்பது தெரியாது. இது பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடம் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


பொதுவாக நம் உடலில் ஓடும் ரத்தத்தில் அதிகளவு தண்ணீர் இருப்பதும் அதில் பிஎச் எனப்படும் கார அமிலத்தன்மை சரியான அளவுக்கு இருந்தால் தான் நோய், நொடிகள் வராது என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாது. நம் உடலில் ஓடும் ரத்தத்தில் பிஎச் அளவு 7.45 என்ற நிலையில் இருந்தால் எந்த நோயும் வராது. இந்த பிஎச் அளவு 6 என்ற நிலைக்கு கீழாக இருந்தால் அது உடல் சோர்வு மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்.


இதே 5 என்ற அளவுக்குக்கீழ் இருந்தால் நீங்கள் மருத்துவமனையில் கோமா என்ற நிலையில் தான் இருப்பீர்கள். இதைவிட 3 என்று பிஎச் அளவு இருக்குமானால் மருத்துவர் ஆண்டவன் மீது பாரத்தை போட்டு விட்டு உங்களைக் கைவிட்டுவிடுவார். அதுதான் நிலைமை.


உடலில் இயற்கையாகவே இந்த பிஎச் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் வேலையை பிட்யூட்டரி சுரப்பிதான் செய்கிறது. ஆனால் வயதாக, வயதாக இந்த சுரப்பியின் செயல்பாடு குறைந்துவிடுவதால் சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து விடுகின்றன.


இதனால்தான் வயதானவர்களுக்கு எளிதில் நோய்கள் வந்து விடுகின்றன. எனவே தரமான தண்ணீரை பருகிவந்தால் மனிதனின் ஆயுள் கூடும் என்பது நமக்குத் தெரிவதில்லை .


அந்தவகையில் தரமான தண்ணீரை ஜப்பான் மற்றும் அமெரிக்க தொழில் நுட்பத்தின் அடிப்படையில் நாங்கள் மட்டுமே வழங்குகிறோம். தண்ணீரில் உள்ள மாலிக்கியூல் அளவை சரிசெய்து 7 முதல் 11.5 என்ற அளவில் தரமுடியும்.


மாம். இதற்காக நாங்கள் தண்ணீரை எலெக்ட் ரோலை சிங் செய்து தண்ணீரின் இயற்கை மூலக்கூறை இயற்கையான முறையில் மாற்றியமைத்துத் தருகிறோம்.


தண்ணீரில் பிஎச் அளவை மட்டும் மாற்றிவிட்டால் போதுமா? இந்த பிஎச் அளவை மட்டும் வைத்துக்கொண்டு நல்ல தரமான தண்ணீரின் அளவை நிர்ணயம் செய்துவிட முடியுமா?


கண்டிப்பாக இல்லை. ஏனெனில் பிஎச் நிலை சரியாக இருந்தாலும் அதனை வைத்துக்கொண்டு மட்டும் தண்ணீரின் தர அளவை நிர்ணயம் செய்து விட முடியாது. அதில் கூடுதலாக சில வேலை களை செய்துதான் நல்ல தண்ணீரைப் பெறவேண்டும். அதற்கானது தான் ஓஆர்பி (ORP & Oxidation Reduction Potential) எனும் தொழில்நுட்பம்.


அதாவது எலெக்ட்ரோலைசிங் மூலம் தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளை பிரித்து வகைப்படுத்தித் தருவது. இதில் ஹைட்ர ஜனின் அளவை மைனசாகக் குறைப்பது. 3 இதனை மைக்ரோ ஓல்ட் என்ற அளவில் குறிப்பிடுகின்றனர். பொதுவாக மைனஸ் 2 ஆயிரத்திலிருந்து ப்ளஸ்2 ஆயிரம் வரை குறிப்பிடுகின்றனர்.


                                           


இதில் 150 முதல் 250 என்ற அளவில் அமைந்திருந்தால் அது குடிநீர் உள்ளிட்ட பயன் பாட்டிற்கு ஏற்ற நல்ல தண்ணீர் எனச்சொல்லலாம். 0 முதல் 150 என்ற அளவில் இருந்தால் அது எதற்கும் பயன்படுத்த முடியாத தண்ணீர் என்பது பொருள்.


இன்னும் சற்று விரிவாகவும், உங்களது இண்டகரேட்டட் ஆர்கானிக் வாட்டர் பிளாண்ட் பற்றியும் கூறுங்களேன். 


பொதுவாக இந்த தொழில் நுட்பத்தைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால் தண்ணீரில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவது என்று புரிந்து கொள்ளலாம். இது போன்ற நவீன தொழில் நுட்பத்தில்தான் தண்ணீர் தேவை யான அளவுக்கு சுத்தப் படுத்தி பின்னர் அதில் செறிவூட்டம் செய்து தரும் வேலையைத் தான் எங்களது தயாரிப்புகள் தருகின்றன.


இந்த முழுமையான ஆர்கானிக் வாட்டர் பிளாண்ட்டை நாங்கள் ஜப்பான், அமெரிக்கத் தொழில்நுட்பத்தில் நிறுவித் தருகிறோம். இதனை நாங்கள் இண்டகிரேட்டட் ஆர்கானிக் வாட்டர் பிளாண்ட் என்று கூறுகிறோம்.


எங்களது ஓஆர்பி தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர், நச்சுத் தன்மை நீக்கப் பட்டதாகவும், சுத்திகரிக்கப்பட்ட தாகவும் இருப்பதோடு நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல் பட வைக்க உதவும் வகையில் ஹைட்ரஜன் ரிச் வாட்டராகவும் HRW), ஆக்சிஜன் செறிவூட் டப்பட்டதாகவும், மினரல் எனப்படும் தாது உப்புச்சத்துகள் நிறைந்ததாகவும் இருக்கும்.


மெட்ரோ வாட்டர், போர் வெல் வாட்டர், மழைநீர் போன்ற எந்த தண்ணீராக இருந்தாலும் அதனை பில்டர்கள் பயன்படுத்தி முதல்கட்டமாக அவற்றில் உள்ள கழிவுகளை நீக்குகிறோம்.


அதாவது குளோரின், அயர்ன் ஆகியவற்றை நீக்கி டிடிஎஸ் (TDS= Total Dissolved Solids) அளவை சிறப்பாக வைத்திருப்பது. அடுத்த கட்டத்தில் தண்ணீரை அதன் இயற்கையான மூலக்கூறு கட்டமைக்கு உருவாக்குவது. அதன்பிறகு வெளிவரும் தண்ணீர் மேல்நிலை தேக்கத்தொட்டிக்கு செல்லும்.


பின்னர் அங்கிருந்துதான் குடிநீருக்காகவும், புறப் பயன்பாட்டிற்காகவும் ஏற்றபடி தண்ணீரில் சில மாற்றங்களைச் செய்து தேவைக்கு பயன் படுத்தும் நிலையை உருவாக்குகிறோம். குடிநீருக்கு அதனை 9 நிலைகளில் சுத்திகரிப்புச் செய்து வழங்கு கிறோம். இந்த குடிநீரில் பிஎச் அளவு 7 முதல் 9.5 என்ற அளவில் இருக்கும். டிடிஎஸ் என்பது 150 முதல் 300 என்ற அளவில் இருக்கும். ஓஆர்பியின் அளவு மைனஸ் 300 லிருந்து மைனஸ் 800க்குள் இருக்கும்.


இது போன்ற நிலையில் எங்களால் சுத்தீகரிக்கப்பட்டு வழங்கப்படும் தண்ணீரானது அனைத்து விதமான பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்கிறது. செம்மண் போன்ற கலரில் உள்ள தண்ணீர், நாற்றமடிக்கும் தண்ணீர், அயர்ன் மற்றும் உப்பு அதிகம் உள்ள தண்ணீர், போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஓரே தீர்வாக இயற்கை சார்ந்த முறையில் இந்தியாவிலேயே எங்களிடம் மட்டுமே கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.


சரி இந்த தொழில்நுட்பத்தை யார் யார் பயன்படுத்திக்கொள்ள முடியும்?


நோய் நொடியில்லாமல் வாழ்நாள் முழுவதும் உடல் நலத்துடன் வாழ நினைக்கும் யாரும் இந்த தொழில்நுட்பத்தின் - மூலம் கிடைக்கும் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும். இதனை தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போர், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், மருத்துவ மனைகள், தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள், உணவு விடுதிகள், மகளிர் விடுதிகள், விவசாயிகள், விவசாயப் பண் ணைகள் மற்றும் அரசின் பொது விநியோகத்திட்டம் என எதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


            இதனால் தீரும் மருத்துவப் பிரச்சனைகள் என்னென்ன?


அன்றாடம் வீட்டில் இந்த ஆர்கானிக் குடிநீரை பயன் படுத்தும் போது மருத்துவ செலவுகள் குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதி கரித்து மனிதனின் வாழ்நாள் கூடுகிறது. இன்று பெரும் பிரச் சனையாக உள்ள சர்க்கரைக் குறைபாடு, இதய நோய், சிறுநீர் மண்டலம் மற்றும் செரி மான மண்டலத்தை சீராக வைத் திருக்க உதவுகிறது.


மேலும், நீரினால் உண் டாகும் 150 வகையான(chronical disease)நோய்கள் வராமல் தடுக்கிறது. இந்த தண்ணீரைத் தொடர்ந்து பருகி வந்தால் குழந்தையின்மைக்கும் நல்ல தீர்வு கிடைக்கிறது. சொரியாசிஸ், எக்சிமா போன்ற தோல் நோய் களும் வராமல் உடல் பொலிவு பெறுகிறது.


                     உங்களது நிறுவனம், திட்டம் பற்றி கூறுங்கள்?


அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் 1, ஜப்பான போன்ற நாடுகளில் 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொழில் நுட்பம் வந்து விட்டது என்றாலும் நம் இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாகத்தான் இது பயன் படுத்தப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவைப் பொறுத் தளவில் எங் களது நிறுவனம்தான் இதற்கு முன்னோடியாகவும், முதன்மையாகவும் திகழ்கிறது.


தமிழகம் மற்றும் புதுச் சேரியில் எங்களுக்கு வாடிக் கையாளர்கள் உள்ளனர். மேலும், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் வாடிக் கையாளர்கள் உள்ளனர். இப்படி ஒட்டுமொத்தமாக நூற்றுக்கணக்கான வாடிக் கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ள எங்களது நிறுவனம், தற்போது விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில் தென்னிந்தியா முழுமைக்கும் விநியோகிப்பாளர்கள் மற்றும் முகவர்களை நியமித்து வருகிறது.


இந்த திட்டத்தில் எங்களுடன் பயணிக்க விரும்புவோர் சிறிய முதலீடாக இரண்டு லட்சம் ரூபாய் கட்டினால் போதும். இதற்கான பொருட்களை நாங்கள் வழங்கி விடுவோம். இதனை விற்பனை செய்ய தனி அலுவலகம் ஏதும் தேவையில்லை. வீட்டிலி ருந்தபடியே தொழிலைத் தொடங்கலாம். குறிப்பாக கட்டுமான திட்டங்கள் வேலை செய்யும் பிளம்பர், கட்டுமானத் தொழி லாளர்கள் மற்றும் மருத்துவ மனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு இது ஒரு நல்ல ஆகியோருக்கு இது ஒரு நல்ல தொழில் வாய்ப்பாக அமையும். இதனை பயன்படுத்திக்கொள்ள விரும்புவோருக்கு அனைத்து விதமான வழிகாட்டுதல் களையும் நாங்கள் செய்து தரத்தயாராக இருக்கிறோம்.


எங்களது நிறுவனத்தில் மாவட்ட விநியோகிப்பாளராகவோ அல்லது முகவராகவோ சேர விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி தொடர்பு கொள்ளலாம்.


பொது மேலாளர் (சந்தைப்பிரிவு) கிருஸ்டல் கிளியர் வாட்டர் சொல்யூஷன்ஸ், கொளத்தூர், சென்னை - 99. செல்பேசி: 94447 81692. போன்: 044-2565 5612, 5616. சந்திப்பு : மேகலைவாணன்.


 


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image