ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டி ருக்கும். அந்த அறை பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது.
பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாக உள்ள இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத் துறை விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்பத் துறையினருடன் இணைந்து இன்றளவிலும் போராடி வருகிறார்கள்.
அவர்கள் மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக் கர், காபி மேக்கர், காய்கறிகளை வெட்டும் யகற்களை வெட்டும் கருவி, இண்டக்க்ஷன் ஸ்டவ் என தனித்தனி யாக கருவிகளை கண்டுபிடித்து பெண்களு க்கு உதவி செய்தாலும் அவர்கள் சமைய லறையில் செலவிடும் நேரத்தை குறைக்க முடிவதில்லை.
வீட்டு சாப்பிட்டிற்காக ஏங்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிட்டாலும் அதில் கிடைக்கும் சுவை நாம் எதிர்பார்ப்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் மக்கள், சுவையாகவும், ஆரோக்கியமாகவும், சுகாதாரமுறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்றும், அவை விரைவில் கிடைக்கவேண்டும் என்றும், சுவை என்பது ஒரே அளவில் எப் போதும் மாறாததாக இருக்கவேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.
இந்த எண்ணத்தை செயலாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்படுவது தான் 'ரோபோ செஃப்'. இந்தியாவில் முதல் சமைக்கும் எந்திர மனிதன்.
இது குறித்து இந்த இயந்திர மனிதனை வடிவமைத்த குழுவின் தலைவரும், ரோபோ செஃப் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி பேசுகையில்,"மென் பொருள் நிபுணராக நான் பதினோரு ஆண்டுகள் பணியாற்றி விட்டு உணவுத் துறையில் ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து இந்த ரோபோ செஃப் என்ற இயந்திர மனிதனை வடிவமைத் திருக்கிறோம்.
இந்த இயந்திர மனிதன் ஆறுநூறு வகை யான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். அதில் இந்தியன், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து நாட்டு உணவுவகைகள் என பல நாட்டு உணவு களையும் சமைக்கும் வகையில் தயாரித் திருக்கிறோம். இதன் மூலம் தினமும் 9,000 நபர்களுக்கு சமைத்து விநியோகிக்கிறோம்.
ஒரே மாதிரியான சுவையுடன் அனை வருக்கும், அவரவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைக்க வேண்டும் என்பதும்அதனை முழுவதும் தானியங்கி அடிப்படையில் தயாராக வேண்டும் என்பதும் தான் ரேபோ செஃப்பின் வடிவமைப்பின் உந்துதலாக இருந்தது. மனிதர்களின் உதவி யின்றி இயந்திரத்தால் எவ்வளவு தூரம் சமையலில் ஈடுபடுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்தோம்.
வடிவமைத்த பின்னர் சமையலுக்கு செல விடும் நேரம் குறைந்திருப்பதை உறுதி செய் தோம். ஒரே மாதிரி யான சுவையை அனை த்து விதமான உணவு வகைகளிலும் அளிக்க முடியும் என்பதையும் உறுதிப் படுத்தினோம். உதாரணத்திற்கு மதுரை சிக்கன் பிரி யாணியை எங்க ளுடைய ரோபோ செஃப் சமைத்தால் மதுரை, இந்தியா மட்டுமல்லா மல் உலகின் வேறு எங்கு சுவைத் தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும். இது ரோபோசெஃபின் மிகப் பெரும் பலன் என்று கூறலாம்.
ஆறாண்டிற்கு முன்னர் எங்க ளுடைய குழுவினர் உணவுத் துறையில் ஈடுபட திட்ட மிட்டோம். நாங்கள் நடத்திவரும் தொழில் நுட்ப நிறுவனத்தில் ரோ போ டீக் பிரிவு எனப்படும் இயந்திர மனிதனை உற்பத்தி செய்யும் பிரிவும் உண்டு. நாங்கள் இயந்திரவியல் துறையில் தானி யங்கி முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
முப்பரிமாண அச்சு இயந்திர கருவியை முழுமையாக தானி யங்கி முறையில் வடிவமைத் திருக்கிறோம். இந்நிலையில் தானியங்கி தொழில் நுட்பத்தை எப்படி மக்களின் தேவைக்கான துறையில் அறிமுகம் செய்வது என்று எண்ணினோம். இன்றைய சூழலில் தானியங்கி என்ற தொழில் நுட்பம் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், எண்டர் பிரைசஸ் நிறுவனங்களில் மட்டும் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையை மாற்றி ஏன் இதை வீடுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்ற கோணத்தில் யோசித்தோம். ஆனால் இதன் தொடக்க நிலையில் ஏராளமான தடங் கல்கள் ஏற்பட்டன.
என்னுடைய துறையைச் சார்ந்த நண்பர்கள், தானியங்கி எனப்படும் ரோ போடீக் துறையில் வல்லவராக இருக்கும் உங்களால் முழுக்க, முழுக்க சமையல் செய்யும் எந்திர மனி தனை உருவாக்க முடியுமா? என சாதாரண மாகவும், நகைச் சுவையாகவும் கேட்டார்கள். கேட்டார்கள். அதன் பிறகு தான் இதற்கான முயற்சியைத் தொடங்கினோம்.
தற்போது நாங்கள் அறிமுகப் படுத்தி யிருக்கும் ரோபோசெஃப் பதினெட்டாவது ஹார்ட்வேர் வெர்ஷன். ஒவ்வொரு முறை யும் பிரத்யேகமான முறையில் மீண்டும், மீண்டும் ரீடிசைன் செய்து கொண்டேயிருந்தோம். இந்த துறையில் இருக்கும் பலமுன்னணி நிறுவனங்களே இது குறித்து ஆய்வு நிலையிலேயே இருக்கும் போது உங்க ளால் மட்டும் எப்படி சாத்தியப் படும்? என்றார்கள்.
ஆனால் ஒன்றை நினைத்து அதில் முழு மனதுடன் பணியாற்றி வெற்றிகிடைக்கும் என்ற மனநிலையில் குழுவாக இணைந்து கடினமாக பணியாற்றியதால் இதனை உரு வாக்க முடிந்தது. இந்த தருணத்தில் இதற்காக உழைத்த என்னுடைய குழு வினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரோபோசெஃப்பை பொறுத்த வரை நாங்கள் இரண்டு வகையான ரோபோவை அறிமுகப்படுத்துகிறோம். ஒன்று வணிக நோக்கம் கொண்டது. மற்றொன்று ரோபோ செஃப் மினி. இது இல்லத்தரசிகளுக்கு ஏற்றது. ரோபோசெஃப்பில் 600 வகையான ரெசிப்பிகளை செய்யமுடியும். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மஷ்ரூம் பிரி யாணி,சாம்பார், ரசம், சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என ஆறு நூறுக்கும் மேற் பட்ட உணவு வகைகளை தயாரிக்க முடியும்.
ரோபோசெஃப் சமைக்கும் முன்னர் நீங் கள் என்ன உணவை தயாரிக்கவேண்டுமோ அதற்குத் தேவைப்படும் பொருள்களை கடையிலிருந்து வாங்கி அல்லது வீட்டிலிருந்து அதிலிருந்து எடுத்து இதற்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்டிருக்கும் சிறிய வடிவி லான பெட்டி போன்ற ஹாப்பர்ஸ் அமைப்பில் இடவேண்டும். இது | மட்டும் தான் இந்த இயந்திர மனிதனுக்கு நீங்கள் செய்யும் ஒரேயொரு வேலை.
இந்த இயந்திர மனிதனுக்குள் நாங்கள் முப்பத்தெட்டு ஹார்ப் பஸை அமைத்திருக்கிறோம். இதைத் தவிர்த்து சாலிட் இன்கிரி டன்ட்ஸான காய்கறிகள் மற்றும் இறைச்சியை போட்டு வைத்துக் கொள்வதற்கென தனியாக பதினெட்டு ஹாப்பர்ஸை அமைத் திருக்கிறோம். தற்போது இதில் சிறப்பு வசதியாக காய்கறிகளை நறுக்குவதற்காக தானியங்கி வெட்டும் இயந்திரத்தையும் பொருத்தி யிருக்கிறோம். இதனைத் தொடர்ந்து நீங்கள் என்ன வகையான உணவு தேர்வு செய்கிறீர் களோ அதற்கான ஆப்ஸை டவுன் லோடு செய்து, கிளிக் செய்தால் போதும்.
ரோபோசெஃப் குறைவான நேரத்தில் சுவையான உணவை தயாரித்து தருவார். ஒரு வேளை நீங்கள் உங்களுடைய வீட்டிலு ள்ளவர்கள் சர்க்கரை நோயாளிகள் அல்லது இரத்த அழுத்த நோயாளிகள் இருக்கிறார்கள் - என்றால் நீங்கள் உணவை தயாரிப்பதற்கு முன்பாக இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குறிப்புகளை தேர்வு செய்து கிளிக் செய் தால் போதும் சர்க்கரை குறை வாகவோ அல்லது உப்பு, காரம் குறைவாகவோ உணவு தயாராகிவிடும்.
இதனால் சமையல் கலைஞர் கள் மற்றும் உணவு சேவை யாற்றும் கலைஞர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அதில் உண்மை யில்லை . இத ற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். போக்குவரத்து மின்விளக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் போக்கு வரத்து காவலர்கள் தான் போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் போக்குவரத்து மின் விளக்குகள் அறிமுகப் படுத்தப்பட்ட போது ஏராளமான போக்குவரத்து காவலர்களுக்கு பணி யிழப்பு ஏற்படும் என்றார்கள். ஆனால் நடைமுறையில் அவர்கள் பணியிழக்க வில்லை. ஆனால் அவர்களின் பணிக்கு இந்த மின் விளக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது. என்றைக்கும் சில தொழில் நுட் பங்கள், சிலரின் பணிகளின் எளிமைப் படுத்தி, பணிச் சுமையைக் குறைக்குமே தவிர அவருக்கு பதிலீடாக எந்த தொழில் நுட்பமும் வரவில்லை.
* 'சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்' என்ற விருதை பெங்களூரில் 'மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சென்ற மாதம் 24 ந் தேதி (நவம்பர்) 'ரோபோ செஃப்' பெற்றுள்ளது. பன்முகத் தேர்வுகளில் தனித்து தேர்ந்தெடுத்து, வழங்கப்படும் இந்த விருது சிறப்பு நிதியுடன் அளிக்கப்படுவது கூடுதல் சிறப்பு கொண்டது.
* துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடை பெற்ற உலகளவிலான கண் காட்சியில் இடம்பெறுவதற்காக இந்தி யாவிலிருந்து ரோபோசெஃப் தேர்வு செய்யப்பட்டது அந்த கண் காட்சியில் பலரின் பாராட்டு களையும் ரோபோ செஃப் பெற்றிருக்கிறது.
* செயற்கை நுண்ணறிவில் (AI) சிறந்த தன்மையில் கண்டு பிடிக்கப்பட்ட இயந்திரம் என்ற அடிப்படையில் 'ரோபோ செஃப்' ஜெர்மனியில் இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட் அப் தயாரிப்பு' என தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நாட்டின் தலைநகரான பெரிலினில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது தனித் துவமான பாராட்டுக்குரியதாகும்.
* ஒரே நிமிடத்தில் பத்து தோசையைத் தயாரிக்கும் கருவி, சப்பாத்தி மற்றும் புரோட்டாவை தயாரிக்கும் கருவி, பஜ்ஜி, போண்டோ போன்ற நொறுக்கு தீனிகளை தயாரிக்கும் கருவி என சமையலுக்கு பயன்படும் வகையிலான பல கருவிகளும் எங்களின் தயாரிப்பு களாக அறிமுகமாகி வாடிக்கையாளர் களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இதன் மூலம் பல தொழில் முனைவோர்கள் உருவாவார்கள். இதில் சுவைக்காக நாங்கள் வடிவமைத்திருக்கும் மென்பொருளில் தமிழ கம் மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலமான சமையல் கலை நிபுணர் களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களின் உதவி யுடன் தான் மென் பொருளை வடிவமைத் திருக்கிறோம்.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்த எந்திர மனிதன் நீங்கள் சொல்வதை செய்யும். இதனை சாதகமாகவும் எடுக்கலாம்உதவியாகவும் பார்க்கலாம். இதன் மூலம் ஒருவர், இருவர், பத்து பேர், நூறு பேர் ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் என எத்த னை நபர்களுக்கு சமைத்தாலும் ஒரேவித மான சுவையுடன் தயாரிக்க முடியும். இத னை மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறோம்.
இந்த ரோபோசெஃப்பில் தயாரிக்கப்படும் உணவு முழுவதும் சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் பிரத்யேகமானவை. இதில் சமைக்கப்படும் உணவு ஆறு மணி நேரத்திற்கு சூடாகவும், சுவை மாறாமலும் இருக்கும். அதே போல் சமைத்த பின்னர் சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தவும் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறோம்.
முகவர் வாய்ப்பு:
'ரோபோ' செஃப்-சமைக்கும் மனிதனின் விற்பனையை முன்னெடுத்து செய்ய விரும் பும் தனியுரிமை விற்பனையாளர்கள் (பிரான் சைஸிகள்)வரவேற்கப்படுகிறார்கள்.
ஆர்டர்களை அவர்கள் சேகரித்துத் தந்தவுடன் அதன் மேற்கொண்ட பணிகள் அனைத்தையும் நிறுவனம் செய்து தரும். பிரான்சைஸ் தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் நிறுவனத்துடன் கீழ்கண்ட எண்களில் தொடர்பு பெறலாம்.
இது எதிர்காலம் போற்றும் தொழில் வாய்ப்பு இது.
தொடர்புக்கு சரவணன் 99404 32545/ 99406 14084