வண்ணமீன் வளர்ப்புக்கு தொழில் பயிற்சி!

விடுகள், வணிக வளாகங்களில் அலங்காரத்திற்கான, வண்ண மீன்களின் வளர்ப்பு மற்றும் பயிற்சி குறித்து சென்னை , மாதவரம், வண்ண மீன் தொழில்நுட்பப் பூங்காவின் திட்ட அலுவலர் பேராசிரியர் ராவணேஸ்வரன் தரும் விளக்கம்.


                                       பயிற்சி விவரங்கள்:


அலங்கார மீன் சந்தையில், அதிக அளவில் விற்பனையாகும் மீன்களைக் கண்டறிந்து இனப்பெருக்கம் செய்கிறோம்.


மீன்கள் நல்ல ஆரோக்கியத்துடன்,விரைவிலேயே இனப்பெருக்கத்திற்குத் தயாராகும் வகையில் சில உயிர் உணவுகளை அவற்றுக்கு அளிக்கிறோம். இதனால் மீன்களின் இனப்பெருக்க உறுப்புகள் விரைவிலேயே முதிர்ச்சி அடைகின்றன.


தவிடு, பிண்ணாக்கு கலந்த உணவுகளை விடவும், உயிர் உணவுகளை உட்கொள்ளும், மீன்களின் உடல்களில் வண்ணங்கள் நன்றாக உருவாகும். மீன்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க தடுப்பு மருந்துகளை அளிக்கிறோம்.


அலங்கார மீன் வளர்ப்பு முறைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சிகள் அளிக்கிறோம். ஒரு நாள் பயிற்சிக்கு 500 ரூபாய். இரண்டு நாள் பயிற்சிக்கு 1,000 ரூபாய். மூன்று முதல் 5 நாள் பயிற்சிக்கு 2,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம்.


பயிற்சிக்கு பின்னர் அதைத் தொழில் வாய்ப்பாக மாற்றிக்கொள்ள இதோ அதற் கான அடிப்படை விவரங்கள்.


                                    வருமான வாய்ப்புகள்:


குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் முதலீடும் 3 சென்ட் நிலமும் இருந்தால் போதும். அலங்கார மீன்களை வாங்கலாம். எந்தெந்த மீன்களை வளர்த்தால் என் னென்ன வகையில், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பயிற்சியில் சொல்லிக் கொடுக்கிறோம்.


வண்ண மீன் வளர்ப்புத் தொழிலை உபதொழிலாக செய்ய விரும்புவோருக்கு வருமானத்திற்கு பல வாய்ப்புகள் உள்ளன.


மீன்உற்பத்தி, வளர்ப்பு, விற்பனை என அனைத் தையும் ஒருங்கே செய்ய வேண்டிய தேவை இல்லை. இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துச் செய்யலாம். மூன்று விதமான தொழில் வாய்ப்புகள் இதில் உண்டு.


                                     


                              மூன்று தொழில் வாய்ப்புகள்:


மேலும் மீன்களை இனப்பெருக்கம் செய்து மீன்குஞ்சுகளை மட்டும் விற்கலாம் அல்லது மீன்குஞ்சுகளை மட்டும் வாங்கி, குறிப்பட்ட காலம் வரை அவற்றை வளர்த்து விற்பனை செய்யலாம்.


மீன் வளர்ப்புக்கு தேவைப்படும் தொட்டி, செடி, இதர உபகரணங்களை மட்டும் வாங்கி விற்பனை செய்யலாம்.


மீன் வளர்க்க ஆவல் உள்ளது அதற்கான இடம் இல்லை எனக் கூறுவோர் எங்களின் வண்ண மீன் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள இடத்தை வாடகை அடிப்படையில் பெற்று குறிப்பிட்ட காலத்திற்கு அதில் மீன்களை வளர்க்கலாம்.


வளர்ந்த மீன்களை விற்க, விற்பனை வளாகமும் இங்கு உள்ளது. அங்கு கடைகளை வாடகைக்குப் பெற்று, வண்ண மீன்கள் மற்றும் மீன் வளர்ப்பு உபகரணங்களை விற்க முடியும் எனத் தெரிவித்தார் பேராசிரியர் திரு. ராவணேஸ்வரன்.


                                                                                   தொடர்புக்கு: 94446 94845.


                                                                                                 - என்.ஜெயராமன்


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image