உணவகத் தொழிலில் உச்சம் தொட்ட 'தோசா பிளாசா' பிரேம் கணபதி!


முயற்சிகளில் தளர்ச்சி இல்லாமலும், 'வீழ்ச்சி களிலும் எழுச்சியுடன் செயல் படத் தயங்காதவனைத்தான் வெற்றியானது தனது வரவேற்பறைக்கு அழைக்கத் தயங்காது என்பார்கள்.


அதற்கான முழு தகுதியையும் சம காலத் தில் கொண்ட ஒருவர்! 'தோசா பிளாசா' பிரேம் கணபதி தள்ளு வண்டி கடையில் ஊழியனாகத் தொடங்கிய அவரின் வாழ்க்கை, அயராத உழைப்பினால் இன்று  எட்டிப் பிடித்துள்ள இடம் எது தெரியுமா?


                                     வாழ்வாதாரத் தேடல்கள்:


சர்வதேச ஓட்டல் சாம்ராஜ்யம் என நாம் பெருமிதமுடன் குறிப்பிடக் கூடிய விதத்தில் முன்னுதாரணமாக உள்ளது. பிரேம் கணபதி பிறந்தது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கிராமம்.


படிக்க வசதியில்லாத ஏழ்மையான குடும்பம். பத்தாம் வகுப்போடு படிப்புக்கு முற்றுப்புள்ளி. வாழ்வாதாரம் தேடிக் கொள்ள வறுமை விரட்டிய விரட்டலில் சென்னைக்கு வந்து சேர்கிறான் அச்சிறுவன்.


அதுவும் எப்படி? தன் வயதே கொண்ட பிற சிறுவர்களுடன் தமிழகத்தின் வட கோடியில் இருந்து தென்கோடிக்கு. அந்த ஆண்டு 1989. அப்போது பிரேம் கணபதிக்கு வயது 16.


அவர் ஊரைச் சேர்ந்த ஒருவர் நடத்திவந்த சரவணா காபி ஹவுஸில் வேலை. பணி காப்பிக் கொட்டை அரைத்து விற்கும் அந்த நிலையத்தின் உதவியாளன். காப்பிக் கொட்டை ஆர்டர் எடுக்க சென்னையின் பல இடங்களிலும் சைக்கிளில் சுற்றித்திரிய வேண்டும். தேடல் மிகுந்த வேலையில் ஓய்வென்பது ஏது?


ஆனால் அதிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டான் பதினெட்டு வயதைத் தாண்டாத சிறுவன் பிரேம் கணபதி. கார ணம் அவனின் குடும்ப ஏழ்மை கற்பித்திருந்த பாடம் அது.


ஏழு குழந்தைகள் கொண்ட ஏழைக் குடும் பத்தச் சேர்ந்த அவனுக்கு வாழ்க்கையின் லட்சியமாக இருந்ததே சுயதொழில் செய்வது என்பது தான்.


அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண் டிருந்த போது வகுப்பு ஆசிரியர் அவனிடம் வாழ் க்கையின் லட்சியம் என்ன எனக் கேட்ட போது ப்ரேம் கணபதி சொன்ன பதில் இது "சென்னையில் கடை வைத்து சுய தொழிலில் முன்னுக்கு வர வேண்டும்" என்பது அவர் அப்போதே தீர் மானித்த ஒன்று .


                                 சென்னையில் பெற்ற அனுபவம்:


இவ்வாறாக சென்னையில் 100 ரூபாய் சம்பளத்தில் அவர் பார்த்த வேலை. அவருடைய அயராத உழைப்பால் 250 ரூபாயை எட்டியது. ஒரு ஆண்டு காலம் பணி யாற்றிய பின் தி.நகரில் உள்ள மற்றொரு காபி விற்பனைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.


முயற்சி உள்ளவனுக்கு முன்னேற்றத்தின் படிகள் தெரிந்து கொண்டே இருக்குமல்லவா! அங்கே கணபதி காப்பிக் கொட்டை வறுப்பது, அரைப்பது, விற்பனை செய்யும் நுணுக்கம் என அத்தொழில் சார்ந்த அத் துனை அம்சங்கள் பற்றியும் விளங்கிக் கொண்டார்.


அடுத்து எனன? தனியாக தொழில் தொடங்கும் ஆர்வம் தானே! அதற்கு குறைந்தது ரூபாய் 50,000 முதலீடு தேவைப்பட்டது. என்ன செய்து என அதற்கான சிந்தனையுடன் தேடலைத் தொடங்கி னான் இளைஞன் பிரேம் கணபதி.


அப்போது தான் அவருடைய நண்பரின் தம்பி ஒருவர் மூலம் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் மும்பையில் பணியாற்றி வருவதாகவும், அங்கு ஆயிரத்து இரு நூறு ரூபாய் சம்பளத்தில் வேலை ஒன்று இருப்பதாகவும், தனக்கு ரூ.200 தந்தால் அந்த வேலையில் சேர்த்து விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.


                                  தேடல் மும்பைக்கு அழைத்தது:


பதினாறு வயது தேடல் மிகுந்த இளைஞனான ப்ரேம் கணபதி தன்னுடைய இலக்கிற்கான தேட லில் எங்கு செல்லவும் தயாராக இருந்தான். ஊருக்குச் சென்று பெற்றோர்களிடம் தெரிவித்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சொல்லாமலே மும்பைக்கு அந்த புதிய நண்பருடன் பயணமானான்.


மும்பையில் பாந்த்ரா என்னுமிடத்தில் தேநீர் கடையொன்றில் வேலை. சேர்த்து விட்டு அவனிடம் எதுவும் சொல்லாமலேயே புறப்பட்டு விடுகிறார் அந்த நண்பர்.


இளம் பருவத்தை எட்டியும், எட்டாமலும் நின்ற இளைஞன் பிரேம் கணபதிக்கு நன்றாகப் புரிந்தது நாம் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்று. மொழி புரியாத ஊரில் வந்து மாட்டிக் கொண்டு விட்டோம். சமாளிக்க வேண்டும் என்ற முதல் தீர்மானத்தை எடுத்தான்.


கருணை மனம் கொண்ட ஒரு டாக்சி டிரைவர் அவனுக்கு உதவ முன் வந்தார். கொஞ்சமாக பணம் சேர்த்து பிரேமை ஊருக்கு மீண்டும் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.


ஏமாறறததைச சுமந்து கொண்டு வெறும் கையுடன் ஊருக்குத் திரும்புவதில்லை என்றிருந்த ப்ரேம் அடுத்த முயற்சியின் பாய்ச்சலைத் தொடங்கினான்.


                              அனுபவம் தந்த தொழில் பாடம்:


தனக்கேற்ற வேலை ஒன்றை தேடி கொள்ளும் முயற்சியில் இறங்கினான். அங்கிருந்த கோயில் ஒன்றின் வளாகத்தில் இரவில் தங்கிக்கொண்டான். பேக்கரி ஒன்றில் வேலை கிடைக்க கடையைப் பெருக்கி சுத்தம் செய்வது என அது இருந்தது. இரவில் பேக்கரியிலேயே தங்கிக் கொண்டன்.


மாதங்கள் ஓடின. உணவகம் ஒன்றில் வேலை சமையலறை வேலை. துடிப்பாக இயங்கும் சிறு இளைஞனின் பரபரப்பால் அடுத்து சர்வர் வேலை. வாடிக்கை யாளரின் குணமறிந்து அவன் செயல்பட்டதை கவனித்த அந்த உணவகத்தின் முதலாளி அவனுக்கு மும்மடங்கு சம்பளத்தை உயர்த்தினார்.


இவனின் சிறப்பான செயல்பாட்டை கவனித்த பக்கத்தில் உணவகம் நடத்தி வந்த உரிமையாளர் இவனை அழைத்து ரோட் டோரக் கடை ஒன்றை போட்டுத் தருகிறேன். நன்றாக நடத்து வரும் இலாபத்தில் உனக்குப் பாதி, எனக்குப் பாதி என்றார்.


மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட பிரேம் சிறப்பாக உழைத்தான். அர்ப்பணிப்பு உணர்வோடு | செயல்பட்டான். இலாபம் அபாரம் ஆனால் பணத்தைக் கண்டதும் முதலாளித்துவம் தோசையைத் திருப்பிப் போடுவது போல் நாக்கை திருப்பிப் போட்டது.


'வேலை தானே பார்த்தாய் சம்பளம் 1,200 ரூபாய் தருகிறேன். முதலீட்டை நீயா போட்டாய் சத்தமாக வெளிவந்தது அந்தக்குரல் பேச முடியாமல் நின்ற பிரேம் இந்த உழைப்புச் சுரண்டலை பொறுக்க முடியாத மனதுடன் ஒருமுடிவை எடுத்தான்.


ஊருக்குத் திரும்பினான். நண்பர்கள், ர்கள் சகோதரர்கள் என அனைவரிடமும் தான் மும்பை யில் கடை ஒன்றைத் தொடங்கிட உதவுமாறு கேட்டுக் கொண்டான். அப்படியான உதவியும் கிடைத் தது. பெற்றிருந்த அனுபவத்தால் மும்பையில் உணவுக்கடை தொடங்க வேண்டும் என்பதே அவர் நோக்கம்.


சமையல் தொடர்ந்த நுணுக்கமான குறிப்புகள் அனைத்தையும் அறிந்து கொண்டான். மசாலா உள்ளிட்ட அனைத்து சமையலறை சரக்குகளையும் ஊரிலேயே சேகரித்துக் கொண்டு மும்பைக்குப் பயண மானான்.


                                         உலகாவிய தொழில் வெற்றி:


வாடகைக்கு எடுத்த கைவண்டியில் உணவுக்கடையை தொடங்கினான். அவனே சமைத்தான். விடியற்காலை தொடங்கி மதியம் வரை உணவுக்கடை வியாபாரம். மாலை கம்ப்யூட்டர் சென்டரில் இன்டர் நெட்டில் தொழில் மேம்பாடு குறித்த கட்டுரைகளைப் படிப்பது.


காலம் வளர்ந்தது. கைவண்டிக் கடை சிறு உணவு விடுதியாக பரிணாம வளர்ச்சி கண்டது. இளைஞர் பிரேம்... அவராக.... தொழிலதிபராக வளர்ந்தார்.


1998 ஆம் ஆண்டு தொடங்க பட்ட 'தோசா பிளாஸா' இன்று அதன் தரமான சைவ உணவு களால், தனித்துவத்தால் இந்தியாவைத்தாண்டி , அமெரிக்கா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து, துபாய், கத்தார், தான் சானியா, மஸ்கட் என மிகப்பெரிய உணவு நிறுவன மாக ஒளிரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.


2014ஆம் ஆண்டு லண்டன் பாராளு மன்றத்தால் உழைப் பால் உயர்ந்த மனிதர் என ப்ரேம் கணபதி பாராட்டப் பட்டார்.


தான் பெற்ற கசப்பான அனுபவம் தந்த பாடத்தால் தொழிலில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணத்தை செயல்படுத்தி வருகி றார் 'தோசா ப்ளாசா' ப்ரேம் கணபதி. தன் நிறுவனத்தில் தன் சகோதரர்கள், ஆரம்ப கால நண்பர்கள் எல்லோருக்கும் பதவி, பொறுப்புகள் தந்துள்ளார். ஓட்டல் உரிமையாளர்கள் ஆக ப்ரான்சைஸ் தந்து பங்காளியாக ஆக்கியுமுள்ளார்.


இன்று தொழில் உலகில் 'பிரேம் கணபதி' பிரபல கணபதி.


                                                                          - தஞ்சை .என்.ஜே.கந்தமாறன்.


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image