புதிய வேளாண் சட்டம் ஒன்றும் புரியாத நிலையில் விவசாயிகள்!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு ஒரு புதிய வேளாண் சட்டத்தை கடந்த மாதம் (நவம்பர்) கொண்டு வந்துள்ளது.


'தமிழ்நாடு வேளாண் விளை பொருள் மற்றும் கால் நடை ஒப்பந்த பண்ணைத்தொழில் மற்றும் சேவைகள் ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கும் சட்டம்' என்று இந்த சட்டத்திற்கு பெயர். சட்டத்தின் பெயர் கொஞ்சம் நீளமாகத்தான் உள்ளது. இதன் பிரச்னைகளும் கொஞ்சம் நீள மாகமல் இருப்பதாக வவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.


தமிழகத்தில் சேலம், ஈரோடு, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஈமு கோழி பண்ணைத் தொழில் பிரபலமாக நடந்து வந்தது. ஈமு கோழிகளை வளர்த்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களால் விவசாயிகளும், நடுத்தர மக்களும் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு ஈமு கோழி வளர்ப்பு மோசடி விஸ்வரூபம் எடுத்தது.


                                                                                   


இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும்இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் தங்கள் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தனர். இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலலிதா இந்த ஒப்பந்த பண்ணை முறைகேடுகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக சுகன்தீப் சிங்பேடி என்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தினார்.அவர் இந்த விசாரணையை மேற்கொண்டு அளித்த அறிக்கையில் ஒப்பந்த பண்ணை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி விவசாயிகள் மற்றும்பொது மக்களை பாதுகாப்பதற்கு ஒரு சட்டம் தேவை என்று அரசுக்கு ஆலோசனை அளித்தார்.


அதன் அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில்கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால் நடை ஒப்பந்த பண்ணைத் தொழில் மற்றும் சேவைகள் ஊக்குவிப்பு எளிதாக்கும் சட்டம்' என்று இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக இருப்பதாலும், வேளாண்துறை மத்திய, மாநில அரசின் கூட்டுப் பொறுப்பில் இருப்பதாலும் இச்சட்டம் மத்திய வேளாண் துறையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு அதன் பின் ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து இந்த சட்டத்தை செயல்படுத்துவது குறித்த வழிமுறைகள் குறித்து அரசு தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டப்படி பண்ணை சார்ந்த எந்த ஒப்பந்தமும் ' வேளாண் வணிகத்துறை அலுவலர் முன்பு இரு தரப்பாராலும் பதிவு செய்யப்பட வேண்டும். இதன்காரணமாக ஒரு விலையை முன் கூட்டியே நிர்ணயித்து ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டால் முடிவில் மார்க்கெட் விலை இறங்கினாலும் ஒப்பந்தவிலையைத்தான் கொடுக்க வேண்டும். இதனால் பேசிய விலை " யைத்தராமல் ஏமாற்ற முடியாது. இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து விவசாயிகள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.


விவசாயிகள் தரப்பில் கூறுகையில் பெரும் பாலும் ஒப்பந்த முறையை கார்ப்பரேட் வேளாண் வணிக நிறுவனங்கள் தான் செயல்படுத்தும். அவர்கள் குறிப்பிடும் தரத்தில் விளைபொருள் இல்லையென்றால் ஒப்பந்த விலையை நிறுவனங்கள் தராது. விளைபொருள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. அது மழை வளம், மண்வளம், இடு பொருள், பருவநிலை, நோய்த்தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது. எனவே ஒப்பந்த தரத்தில் விளைபொருள் இல்லாமல் தரம் குறைந்ததாக இருக் கிறது. எனவே குறைந்தவிலைதான் தர முடியும் என்று நிறுவனங்கள் கூறுவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளது . இந்த சட்டத்தில் 110 விளை பொருட்கள் முதற்கட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறது.ஆனால் இவற்றுள் எந்த விளை பொருளை உற்பத்தி செய்வது என்பதை ஒப்பந்த நிறுவனங்கள் தான் முடிவு செய்யும்.


தமிழகத்தின் பயிர்சாகுபடி, கால் நடை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடக் கூடியது. உதாரணமாக நெல் சாகுபடியை எடுத்துக் கொண்டால் ஒரு பகுதி விவசாயிகள் பயிரிடும் நெல் ரகத்தை இன்னொரு பகுதி விவசாயிகள் தேர்வு செய்வதில்லை. கால்நடை வளர்ப்பும் சீதோஷ்ண நிலைக்கு தகுந்தவாறே அமையும்.


இந்த நிலையில் பயிர் தேர்வினை மற்றும் கால் நடைத் தேர்வினை யார் செய்வது என்பதும் உற்பத்திப் பொருளை எடுத்துக் கொள்ள கூடிய தர அளவு நிர்ணயம் செய்வதும் முக்கியமானதாகும்.


எனவே இச்சட்டம் சம் பந்தமான விதிமுறைகளை அறிவிக்கும் முன்பு அரசு விவசாயிகளின் கருத்துக்களை மாவட்டம் தோறும் கூட்டம் நடத்தி .சட்ட ஷரத்துக்களை தெரிவித்து அது தொடர்பாக விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் பின் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


                                                                                        - குயிலிமுனுசாமி


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image