தொழில் தொடங்க வேண்டு மென்றவுடனே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம். அதை எப்படி புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன்பின் பலர் பணத்தினைத் தேடுவதில்லை.
தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக தொழில் கடனுதவி செய்கின்றன. அதனைப் பெறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு. தொழில் தொடங்கி அதானி, அம்பானி போல் ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்று விடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பணம் இல்லை, கடன் கேட்டேன், கிடைக்கவில்லை என்பது தான்.
டாடாவோ, அம்பானியோ பெரிய முதலீடு செய்து தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் தங்கள் தொழிலை ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்த காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சமல்ல அவர்களோடு ஒப்பிட்டால் தொழில் கடன்கள் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்சனைகள் மிக, மிகக் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணு கினால் அந்த பிரச்சனைகளையும் வென்று நிச்சயம் வெற்றி பெறலாம்.
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றிபெற முடியும்.
வேலை செய்ய பிடிக்கவில்லை, அதனால் தொழில் செய்யப்போகிறேன் என்று சொல்லி தொழிலில் இறக்குகிறவர்கள் வெற்றி பெறுவது கடினம் தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான தொலைநோக்கு நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம் தான். தொழில் கடன் கேட்டு வங்கியை அணுகு கிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான்.
தொழில் முனைவர் பேசும் வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாக கவனிக்கப்படும். சில சமயம் வங்கி மேலாளர் தொழில் முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளை கேட்கவும் செய்யலாம். சோதிப்பது சோதனைக்குள்ளாக்குவது போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள் வங்கி மேலாளர்கள் திருவிளையாடல் பாணியில் செயல்படுவார்கள். எனவே தொழில் தொட ங்குகிறவர்கள் தெளிவான தொலை நோக்குப் பார்வை மற்றும் உறுதியான திட்டம் தேவை.
பொதுவாக நீங்கள் செய்யப் போகிற பிசினஸ் இது தான் என்று முடிவு செய்து விட்டால் அதற்கான விவரமான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய சிறு குறிப்புகள், நீங்கள் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன விவரங்கள் தெரியும். எப்படித் தெரியும், அந்த தொழிலில் என்ன புதுமைகள் செய்யப்போகிறீர்கள். உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும், உங்களின் வாடிக்கையாளர்கள் எங்கு யார் உள்ளனர் என்பது பற்றி தெளிவாக கூற வேண்டும். நீங்கள் செய்யப் போகிற தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.
இதற்கு DSCR என்கிற விதத்தை நிச்சயம் பர் பார்ப்பார்கள். ஒரு மாதத்துக்கு நீங்கள் ரூ.15,000 சம்பாதிக்கிறீர்கள். எனில் அசலுக்கும், வட்டிக்கும் சேர்த்து ரூ.10,000 போக, குறைந்தது ரூ.5,000 உங்களிடம் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக்கடன் கிடைக்கும்.
நீங்கள் செய்யும் தொழிலில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு வங்கியை அணுகினால் தைரியமாக, தெள்ளத் தெளி வாக பேசலாம். பிசினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்து விடும்.
அந்த தொகையில் டெபிட் ஈக்லி டி ரேஷியோ (Debit Equity Rashio) என்ற விகிதத்தில் நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். இந்த விதி தான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும்.
அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிசினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பது தான் இதற்கு காரணம்.
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாக கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம் சரியான திட்டமிடல் இல்லாதது தான்.
உதாரணமாக உங்கள் தேவை ரூ.25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். ரூ.25 லட்சத்துக்கு மேல் போகும் போது ஒவ்வொரு வங்கியும் தொழில் கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறு தொழில் கிளையை (Smsme Branch) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆ ஆலோசனைகளை வழங்குவார்கள்.
தேவையான ஆவணங்கள்:1.அடையாள சான்றிதழ், 2. முகவரிச் சான்றிதழ், 3. பிசினஸ் நடைபெறும் இடத்துக்கான சான்று, 4. திட்ட அறிக்கை, 5. வருமான எதிர்பார்ப்பு (கடனை திருப்பி செலுத்தும் காலம் வரைக்கும்) தேவைப்பட்டால் உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட தடையில்லா சான்றிதழ். பிசினஸ்நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்று அல்லது வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தச் சான்று போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
இவை தவிர வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பதிலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள். முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியிருந்தது. அதனை ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் வழங்க செய்து எளிதாக்கி உள்ளார்கள்.
தொழில் தொடங்கிய உடனே வெற்றி யடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றிபெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அணுகு முறை வைத்தே தக்கவைக்க முடியும். உங்கள் தொழில் நிறுவன உற்பத்தி பொருட்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமூகமான அணுகு முறையே வெற்றிக்கு வழி வகுக்கும். இவ்வாறு வங்கி அதிகாரி ஆர்.ரமேஷ் தெரிவத்தார்.