விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகள், கண்டு பிடிப்புகள் என்றாலே ஒரு காலத்தில் அயல்நாடுகள் என்று மட்டும் தான் இருந்தது. ஆனால் இன்றைய அளவில் வெளிநாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேறி வருகிறது.
புதிய நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இந்தியாவின் பங்கும் தற்போதைக்கு சிறப்பாக உள்ளது. மின்கலன் தயாரிப்பு தொழில் (Battery Manufacturing Business) உள்ள இந்திய நிறுவனமான எக்சைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாயிலாக கூட சமீபத்தில் இந்தியாவின் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி உலகுக்கு தெரியவந்துள்ளது.
கடந்த நிதியாண்டிலே கடற்படை நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவற்றிற்கான பேட்டரிகள் மற்றும் இதர உதிரிபாகங்களை தயாரித்தளித்த இந்த இந்திய நிறுவனம் அதனைத் தொடர்ந்து அடுத்த தலை முறை நீர்முழ்கி கப்பல்களுக்கான புதிய ரக பேட் டரிகளை தயாரிக்கவும் ஆயத்தமாகியுள்ளது.
இந்நிறுவனத்தின் 2019 ஆண்டறிக்கையில் சர்வதேச சந்தையில் எங்கள் முத்திரையை மேலும் அழுத்தமாக பதிக்கும் நோக்கில் அடுத்த தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களுக்கான அதிநவீன பேட்டரிகளை தயாரிக்க இருப்பது பற்றி குறிப்பிட்டுள்ளது இந்நிறுவனம்.
இந்திய, ரஷ்யா, ஜெர்மானி, பிரான்ஸ் நாட்டு ரக நீர்முழ்கி கப்பல்களுக்கான பேட்டரிகள், உதிரி உறுப்புகள் தயாரிப்பை தொடர்ந்து தங்கள் கவனத்தை செலுத்த இருப்பதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது
அடுத்த தலைமுறை நீர் மூழ்கி கப்பல் களுக்கான பேட்டரிகளுடன் இந்திய தொழில்நுட்ப மாதிரி நாலு (Type-IV) ரக நீர் மூழ்கி பேட்டரிகள் மற்றும் இன்டர் செல் கனெக்டர்கர்கள் ஆகியவற்றை வடிவமைக்கும் பணியிலும் எக்சைட் இன்டஸ்ட்ரீஸ் தற்போது ஈடுபட்டு வருகிறதுஇன்றளவில் ரகம்1, ரகம்2, ரகம்3 நீர் மூழ்கி கப்பல்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்யும் திறன் எக்சைட் நிறுவனத்திடம் உள்ளது.
இந்திய கடற்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் இலக்கில் தொடர்ந்து அத்தரப்பு ஆர்டர்களை முயன்று வருகிறது இந்நிறுவனம். இத்துடன் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது எக்சைட் நிறுவனம். அணுநீர்மூழ்கி கப்பல்கள் எனப்படும் நியூக்ளியர் சப்மெனான்களில் பயன்படுத்தப்படும் இரண்ட பயன்படுத்தப்படும் இரண்டாம் ரக (Type II-Atv) பேட்டரிகள் மற்றும் கிலோ வகை நீர்மூழ்கி கப்பல்களுக்கான ஒன்றாம் பேட்டரிகளின் கடற்படைத் துறைக்கான வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவற்றால் முக்கிய இலக்கு வைத்துள்ள எக்சைட் நிறுவனம் கடந்த நிதியாண்டில் வியட்நாம் கடற்படைக்கு இரண்டு கோடி புது டிசைன் நீர்மூழ்கி பேட்டரிகள், துணைக்கருவிகள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்தது. இதுமட்டுமல்ல, ஒரு சிறு நீர்மூழ்கி கப்பலுக்கான ஒரு ஜோடி பேட்டரிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் எக்சைட் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
எக்சைட் நிறுவனமானது பலதரப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யன் கிலோ 636, ரோமியோ மற்றும் ஃபாக்ஸ்ட்ராட் கிளாஸ், ஜெர்மன் 209 கிளாஸ், பிரெஞ்சு ஸ்கார்பென் கிளாஸ், இந்தியா தர நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றுக்கான உயர்வகை பேட்டரி வகை அளிக்கும் நிறுவனங்களின் வெகு சில நிறுவனங்களின் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனம்.
அடுத்த இரு ஆண்டுகளில் வளர்ந்த உலகளாவிய நாடுகளின் தயாரிப்புகளுக்கு ஈடு கொடுக்கக்கூடிய உயர்தரமான, நீடித்து உழைக்கக் கூடிய பேட்டரிகளை உருவாக்குவது முக்கிய இலக்காக எக்சைட் இன்டஸ்டரீஸ் நிறுவனம் கொண்டுள்ளது.
இதனையொட்டி 1,400 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யும் திட்டங்களை அந்நிறுவனம் உருவாக்கி வைத்துள்ளது. எனவே தொடரும் தொழில் நுட்பத்துறையில் எக்சைட் போன்ற நிறுவனங்களின் திட்டங்கள் மூலம் உலக தொழில்நுட்ப அரங்கில் இந்தியா மேலும் முக்கியமான இடத்தை பிடிக்கும் என கருதப்படுகிறது.
- சக்தி