வெற்றிக்கான திசைகளாக தீர்மானியுங்கள்

'வெற்றியை தேடித் கொண்டிருப்பவனுக்கு பார்வை போகும் இடமெல்லாம் திசைகள் - திசைகள்- எங்கும் வழிகள்' என்கிறது ஒரு புதுக்கவிதை.ஆம்.வெற்றியுள்ள வேளைக்காக துடித்திருப்பவனின் வெற்றித்தாகம் வழிகளை திசையாக்கும்.திசைகள் தோறும் புதிய திருப்பு முனைகளைத் தரும்.


திருப்பு துனைகளாகும் திசைகள்


'வெற்றிக்கான வாசல் காண்கின்ற இடத்தில் தென்படாது அது இலச்சிய நோக்குடன் செயல்படுபவனின் மனக் கண்ணுக்கு மட்டுமே தெரியும்' என்கிறது தன்னம்பிக்கை தரும் அறிஞர் டேல் கார்னகியின் வார்த்தை.


எவ்வளவு தெளிவான வழி காட்டல்? வெற்றி பெறுவதில். நாம் ஆற்றைப் போலத் பாலக் தான் செயல்பட வேண்டும்.சிறு தடைகள், தடங்கல்கள், சிரமங்கள், தோல்விகள் வரலாம்.ஆனால் அதெல்லாம் இலக்கை அடையும் ஆர்வத்தைக் குறைத்துவிடாது.


தண்ணீரில் ஓடும் முயற்சி என்பது எவ்வளவு தெளிவானது.இயலாவிட்டால் சுற்றி வளைத்து போகும் வழிகண்டு ஓடும். இயலும்மானால் தடையை தகர்த்தெரிந்து வேகம்காட்டும்.


இலக்கு நோக்கிய செயல்பாட்டில் இயங்கும் ஆறானது கடலுடன் சென்று சேறும் வரை தன் பயனத்தை நிறுத்தாது.


ஆம்... இலக்கு நோக்கிய செயல்பாட்டில் இயங்குபவருக்கு காண்கின்ற திசையெல்லாம் வெற்றியின் வழிகள் தென்படும்.



வெற்றிமேல் ஆசை வை:


இலட்சிய நோக்குடன் செயல்படுபவன் தான் செல்ல வேண்டிய இலக்கைச் சரியாக நிர்ணயம் செய்து கொள்கிறான்.அதை அடையும் நோக்குடன் இயங்கும் அவனுக்குவெற்றிக்கான வழிகள் எல்லா திசைகளிலும் தெரிகின்றன. |


முற்றும் பெறும் இலக்குதான் அவனுடைய நோக்கமே தவிர செல்லும் வழிகள் அல்ல. அதனால்தான் திசைகள் எங்கும் வழிகள் அவனால் உணர்ந்து கொண்டு, அதில் பயணித்து இலக்கு நோக்கிய இலட்சிய விழிப்புடணர்வுடன் செயல்பட முடிகிறது.


திசைகளை எல்லாம் வெற்றிக்கான வழிகள் என எண்ணுபவர்கள் எப்படிபட்டவர்கள்? தற்காலிக பின்னடைவுகளைத் தாக்கு பிடிப்பவர்கள்


தோல்விகள் வழியிலும் விடா முயற்சியுடன் தொடர்பவர்கள்


தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள் இவர்கள் மட்டுமே வெற்றியை நிலை நாட்டுவா நிலை நாட்டுவார்கள் என்கிறது அறநெறிச் சாரம் என்கிற முதுமொழி நூல.


செயல்பாட்டு நோக்கில் இலக்குடன் இயங்குபவன் தடைகளால், தோல்விகளால் துவண்டு விடாமல் அதை நோக்கி முன்செல்பவன்.


திசைகளில் பயணிக்கிறான்.வழிகளை உருவாக்கி திசையாகத்தீர்மானிக்கிறான். செல்லும் இலக்கு சார் வெற்றிச்சாலையை அதுவே நிர்ணயம் செய்கிறது.


புதிய பாதை போடு


புதிய பாதை போடு அறிவு ஆட்சி செய்யும் இடத்தில் ஆற்றல் ஆட்சி செய்யாது. மாறாக துணையே செய்யம்” என அப்படிப்பட்ட செயற்பாட்டாளனைப் பாராட்டுகிறார் ஜான் மில்டன் என்ற ஆங்கிலக் கல்வி.


எதிர்பார்ப்புகளுக்காகக் காத்திருப்பதை விட இருப்பதில் முயன்றால் புதிய பாதை யொன்றை உருவாக்கிவிடலாம் என்கிறது தன்னம்பிக்கை வழிகாட்டல் மொழி.


ஆம், திசைகளே இல்லாவிட்டாலும் கூட தனக்கென தனித்துவமான ஆக்கபூர்வமான செயல்பாட்டைக் கொண்டிருப்பவன் அதை சாதித்துக் காட்டுவான் என்பதுதான் அதன்பொருள்.


வெற்றிகளின் வாய்ப்பைத் தேடலுடன் எதிர்நோக்கி இருப்பவனின் சாதனைகள் கணக்கற்றவையாக இருக்கும். தொடர் வெற்றி களின் நாயகனான அவன் விளங்குபவன். 


 ஒவ்வொரு வெற்றியோடும் அவன் பயணம் நின்றுவிடுவதில்லை.அடுத்தடுத்து வெற்றியின் திசைகள் அவனுக்குப் புலப்பட்டுக்கொண்டே இருக்கும்.


'ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு விநாடியிலும் தன்னைத்தானே கவனித்துக் கொண்டிருப்பவனே தனது காலடிகளை வெற்றிப் பாதையில் வைக்கிறான்' என்கிறது கிரேக்கப் பழமொழி.


அவனின் ஆழ்ந்த கவனமே அடுத்தடுத்த அவன் காலடிகளை வைக்கும் இடத்தையும் தீர்மானித்து அவன் காலடிச் சுவடுகளைத் தடமாக ஆக்குகிறது.


திசைகளைத் தீர்மானம் செய்


தடமாய் மாறிய அந்த இடமும் திசையாகத்தானே கண்டுகொள்ளப்படும். நான்கு திசைகள் எனப்பிரிக்கப்பட்ட இலக்குகள், இடைசார்ந்த நாலு இலக்குகளாகி எட்டுதிசைகளாப் பரிணமித்த நிகழ்வும் அப்படித்தானே.


ஆம்! இப்படித்தான் திசைகள் எல்லாம் வழிகளாகும்.வழிகள் எல்லாம் வெற்றிச் சாலைகளாக திகழும்.இலக்கு நோக்கிய முயற்சியுடையவனால் மட்டுமே அதை உருவாக்க முடியும்.


அது உண்மைதானே.இலக்கு ஒன்றை கணத்துக கொண்டு திசைகளை இலட்சியப் பாதையாகத் தீர்மானித்து, முயற்சிகளை மேற் கொள்பவனே அந்த பயணத்தை சாதனைச் செயல்பாடாக மாற்றிக் கொள்கிறான்.


'திறமை எல்லோருக்கும் இருக்கிறது. அது நடத்திச் செலலும் இருண்ட பாதைகளில் பின் தொடரத்தான் துணிச்சல் தேவைப்படுகிறது' என்கிறார் அறிஞர் எரிக்கா ஜாங்.


அத்தகைய இருண்ட பாதைகளைத் திசைகளாகத தாமானத்துககொண்டு முன்னேறுபவர் தீர்மானித்த வெற்றியை அடைவான் என்பதே உண்மை.இதைத்தான் வில ரோகோஸ் என்ற அறிஞா இப்படிச் சுட்டிக்காட்டுகிறார்.


செயல்களைத் தொடருங்கள்


* வெற்றி பெறுவது என்பது மிகவும் எளிதானதே


* என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்.


* செய்வதை விரும்பிச் செய்.


* செய்வதை நம்பிக்கையோடு செய்.


இப்படி மிக அழகாக, தேடலின் திசையில் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை குறிப்பாக உணர்த்துகிறார் அவர்.


இந்த நோக்கம் என்பது எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என்று மற்றொரு முனையி லிருந்து தெளிவாக சுட்டிக் காட்டுகிறார், மனித குலத்துக்கு உதவும் ஆயிரத்துகும் மேலான பொருட்களைக் கண்டுபிடித்த விஞ் ஞானிகள் தாமஸ் ஆல்வா எடிசன்.


நான் எனக்கு சந்தோஷம் தரும் செயலைத் தான் தொடர்கிறேன்.அதற்குப் பரிசாக இந்த உலகம் எதை வெற்றி என்று சொல்கிறதோ, அது வந்து சேருகிறது” என்கிறார்.


ஆம்! வெற்றியை விரும்பினால் திசை யெங்கும் வழிகள்தான்.


                                                                                        - அமிர்தபுத்திரன்.


 


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image