சரிவுகளே இல்லாமல் தொடர்ந்து வளர்ச்சிகளை மட்டுமே காண்பது என்பது உலகின் எல்லா நிறுவனங்களுக்கும் எப்போதுமே இயலாத ஒன்று தான். குறிப்பாக போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் பின்னடைவுகள் இல்லாமல் வெற்றி பாதையில் பயணிப்பதென்பது மிக மிக சவாலானதே.
கைப்பேசி உலகின் நட்சத்திர சாதனமான 'ஐஃபோன் மற்றும் ஐபாட் போன்ற கருவிகள் தயாரிப்பின் மூலம் குறுகிய காலங்களில் உலகின் பிரபல நிறுவனமாக உருவெடுத்த ஆப்பிள் நிறுவனமும் இந்த பொதுவான நியதிப்படி சறுக்கலை சந்தித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான 'ஐ'போன்கள் வியாபாரத்தில் அண்மையில் சற்று மந்த நிலை ஏற்பட்டு ள்ளது. அந்த செல்போன்களுக்கான வரவேற்பு தொடர்ந்து குறைந்து வருவதன் விளைவாக ஆப்பிள் நிறுவனம் சற்று ஆட்டம் கண்டுள்ளது. எனவே சரிவிலிருந்து மீண்டு வருவதற்காக அதே தொழிலில் புதிய உத்திகளை புகுத்தும், முயற்சிகளை செய் வது என்றில்லாமல் மாற்று முயற்சிகளை கையிலெடுத்துள்ளது.
கடன் அட்டை (Creditcard) வீடியோ கேம் சேவைகள் தொலைக்காட்சி செயலி , செய்தித்தாள் செயலி என்ற அஸ்திரங் களுடன் தன்னை புதிதாக வடிவ மைத்து கொண்டு வளர்ச்சி படிகட்டுகளில் ஏற அடி யெடுத்து வைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம். கடந்த மார்ச் 25 அளவில் அறிமுகப்ப டுத்தப்பட்ட இதன் கிரெடிட் கார்டு சேவை டிஜிட்டல் முறையிலானது. ஏராளமான பரிசு திட்டங்களுடன் தினசரி நிதிபலன்களை உள்ளடக்கியதாக ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் கடன் அட்டை சேவை உருவாக் கப்பட்டுள்ளதாம்.
ஆப்பிள் வாலட் செயலியில் எழுப் பப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கடன் அட்டை நம் கைகளில் பாக்கெட், பர்சுகளில் புழங்கும் வழக்கமான கடன் அட்டைகளை விட பல்வேறு நன்மைகளை கொண்டதாக கூறப்படுகிறது.
அதாவது தாமத கட்டணம் அளவைக் கடந்து பயன்படுத்துவதற்கான கட்டணம் போன்றவை ஆப்பிள் நிறுவன டிஜிட்டல் கடன் அட்டைக்கு கிடையாதாம். இவை மட்டுமல்ல. இந்த அட்டை பயனாளிகளுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதமே நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. இது தவிர பயனாளி களின் அனைத்து தகவல்களும் பகிவர்த்த னைகளும் ஆப்பிள் சர்வரில் இல்லாமல் ஆப்பிள் செல்போனில் சேமிக்கப்படும்.
இவ்வழியில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிக பாதுகாப்பு நிறைந்ததாக அமையும் என்று குறிப்பிடப்படுகிறது. கடன் அட்டை சேவை இப்படி பல சிறப்புகளுடன் குறுகிய காலத்தில் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக அதன் மூலத் தளமான ஆப்பிள்பே (Apple Pay) இவ்வருட இறுதிக்குள் 40 நாடுகளில் பெறக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சற்று தாமதாகவே இச்சேவை வரும் என தெரிகிறது.
இதனையடுத்து ஆப்பிள் சமீபத்தில் அறிமுப்படுத்தி டிவி ஆப் (TV APP) பிரபல சேனல்களான எச்பிஓ போன்றவற்றின் நிகழ்ச்சிகள் அமேசான் போன்ற பிரபல நிறுவனங்களின் முக்கிய பொழுது போக்கு வீடியோக்கள் ஆகியவற்றை திரையிடும்.
இதனுடன் ஆப்பிள் டிவி மூலமாக வாடிக்கையாளர்கள் திரைப்படங்களை வாடகைக்கு எடுக்கவும் வாங்கவும் முடியும். ஆப்பிள் நிறுவன டிவியானது அந்நிறுவன தயாரிப்பான மேக்-ல் தொடங்கி சோனி, எல்ஜி, ஷசியோ தொலைக்காட்சிகளிலும் மற்றும் அமேசான் ஃபயர்டிவி, ரோகு போன்ற சாதனங்களிலும் இடம் பெறும்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆப்பிள் நிறுவன சேவையை பெற முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் கேம் (Game) சேவையும் மிகச் சிறப்பான வரவேற்பு பெறு வதற்காக இந்த விளையாட்டுகளை உருவாக் குபவர்கள், மேம்படுத்துவோர் பலருடன் கைகோர்த்துள்ளது. இதில் குழந்தைகளுக் கான பொழுதுபோக்குகளை வழங்குவதில் பிரசித்தி பெற்ற நிறுவனமான வால்ட் டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கு கின்றன. விளையாட்டு சேவைகளை முதன் முறையாக சந்தா அடிப்படையில் அளிக்கும் சேவையாக ஆப்பிள் நிறுவனத்தின் கேம் சேவை அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உலகளாவிய செய்திகளை வழங்கும் நோக்கில் ஆப்பிள் நி யூ ஸ் ப்ள ஸ் (Apple News +) என்ற செயலியையும் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி யுள்ளது. வெகு சமீப மற்றும் மிக பழமைான செய்திகள், பிரபல பருவ இதழ்களான டைம், தி நியூயார்க் தி அட்லாண்டிக், நேஷனல் ஜியோகிராபிக் உள்ளிட்டவற்றின் கட்டுரைகள் ஆகியவை இந்த செயலியில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக் கின்ற ன. |
ஆப்பிள் இப்படி அண்மையில அடுக்கடுக்கான சேவைகளை உருவாக்கி இருப்பதன் முக்கிய காரணம் சமீபத்தில் அது சந்தித்திருக்கும் சரிவை சரிசெய்வதற்காக தான் தன்னுடைய செல்போன் வாடிக்கை யாளர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது மற்றும்பிற அனைத்து வகையான செயலி, செல்போன் இன்டர்நெட் பயன் பாட்டாளர்கள் தன் வசமாக்குவது மூலம் இழப்புகளிலிருந்து மீண்டு இலாபகரமான இரண்டாவது அத்தியாயத்தை எட்டும் என கருதுகிறது ஆப்பிள். இது கனியுமா என்பது காலபோக்கில் தான் தெரியும்.
- சி.வேலுமணி.