வளர்ச்சிகளுடன் விரிவடைப் போகும் செயற்கை இவுளித்தொழில்!


இந்திய ஜவுளித்தொழில் நாட்டின் பொருளாதாரத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய தொழில். உணவு உற்பத்தி, வர்த்தகம் போன்றே மிக முக்கியத்துவம் நிறைந்த ஒரு தொழில் ஜவுளித்தொழில்.


பின்னலாடை, இயற்கை இழை என பல உட்பிரிவுகளுடன் உற்சாகம் குறையாமல் எப்போதும் இயங்கி வரும் இத்தொழிலின் ஓர் அங்கமான செயற்கை ஜவுளி துறையில் சமீபமாக ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாத அளவில் இத்துறையின் தொழில் நிறுவனங்களுக்கான செயல் முதலீடுகளுக்கு ஒரு தடையாக இருந்த உள்ளீட்டு வரி கடன்களை தளர்த்த தொடங்கியது மத்திய அரசு. இந்த நகர்வு அத்துறை தொழில் முனைவோருக்கு பெரிய நிவாரணமாக அமைந்ததையடுத்து இத்துறை பெரிதும் உற்சாகம் அடைந்துள்ளது


இதன் ஒரு நிலையாக செயற்கை ஜவுளி உற்பத்தியாளர்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் ரூ.70,000 கோடி முதலீட்டில் உற்பத்தி திறனை 5 இலட்சம் டன்னாக உயர்ந்த திட்டமிட்டுள்ளனர். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இத்துறை ஏறக்குறைய 3 இலட்சம் புதிய உற்பத்தி திறனை சந்தித்து அதன் மூலம் தற்போதைக்கு செயற்கை ஜவுளியின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்னாக  உள்ளது.


இத்துறையில் இந்தியாவின் அண்டை நாடான சீனாவின் இன்றைய உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 55 மில்லியன் டன். இவ் வகையில் போட்டி நாடுடன் அதிகம் பின் தங்கியிருந்தாலும் அரசின் உள்ளீட்டு வரிக் கடன் சலுகை. இத்துறை நிறுவனங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.


இந்த சலுகையை அடுத்து ஒரே மாதிரி யான வரி மற்றும் இறக்குமதி மீதான வரி உயர்வு ஆகியவற்றையும் அரசு நடை முறைப் படுத்தினால் இந்திய செயற்கை ஜவுளித்துறை போட்டி நாடுகள் வியக்கும் அளவுக்கு சிறப்பான வளர்ச்சிகளை வரும் காலங்களில் காணும் என தெரிவிக்கிறார்கள் இத்துறை தொழில் முனைவோர்.


இந்திய ஜவுளித்துறையின் மொத்த பயன்பாட்டில் செயற்கை ஜவுளி வகையின் கீழ் வரும் பாலியெஸ்டரின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. சர்வதேச அளவில் 27 சதவீத பருத்தியின் பயன்பாடுக்கு எதிரான பாலியெஸ்டரின் பயன்பாடு 73 சதவீதமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவிலே பாலி யெஸ்டர் பயன்பாடு 40 சதவீதம் என்ற அளவிலே உள்ளது.


வருங்கால உலகின் முக்கிய ஜவுளி இழை பாலியெஸ்டர் தான் என்றே பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் யோகா போன்றவை சார்ந்த ஆடைகள் தேவை உலகம் முழுவதும் சமீபமாக அதிகரித்து வருகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்ய பாலியெஸ்டரை பயன்படுத்துவது மிகவும் அவசியம் என கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி செயற்கை நூலிழை உற்பத்தி யாளரான ஃபிலாடெக்ஸ் இந்தியா அதன் தினசரி உற்பத்தித் திறனை 300 டன்-ல் இருந்து 1,050 டன்னாக உயத்த முடிவு செய்து ள்ளது. இதற்காக ரூ.275 கோடியை செலவிட அது திட்டமிட்டுள்ளது. புதிய திட்டப்பணி குஜராத்தில் தொடங்கப்பட்ட உள்ளது. இது சார்ந்த எந்திரங்களுக்கான ஆர்டர் போடப் பட்டு விட்டது.


வரும் நிதியாண்டில் இத்திட்டப்பணி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் திறன் 2,37,000-ல் இருந்து 3,28,000 டன்னாக உயர்ந்தது. இந்நிறுவனத்தின் வருவாயில் ஏற்றுமதியில் பங்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. செயற்கை ஜவுளித் தொழிலின் இன்னொரு முக்கிய நிறுவனமான பிலோசா இன்டஸ்ட்ரீஸ் இதே போல அதன் தினசரி திறனை 700 டன் வரை கூட்ட திட்டமிட்டுள்ளது.


இதே போல மேலும் சில நிறுவனங்களும் தங்களது திறன் பெருக்கும் திட்டம் கொண்டு ள்ளன. உலக அளவில் பாலியெஸ்டரின் தேவை அதிகரித்து வருவதாலே வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இப்படி நிறுவனங்கள் திறனை அதிகரிப்பதில் தீவரம் காட்டுகின்றன. செயற்கை, ரேயான் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைப்பின் விவரப்படி ஜவுளி பயன்பாடு 2017-18-ல் இருந்ததுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் சற்று அதிகரித்துள்ளது.


பாலியெஸ்டர் போன்ற ஜவுளிகளின் மீதான அதிக இலக்கால் 2018ஆம் ஆண்டில் வியட்நாம் $34 பில்லியன் அளவில் ஏற்று மதி செய்துள்ளது. 2019-ல் இலக்கை $36 பில்லியனாக வியட்நாம் உயர்த்தியுள்ளது. இந்த மொத்த அளவில் விஸ்கோஸ் அல்லது பருத்தியுடன் பாலியெஸ்டர் கலந்த ஜவுளிகளின் மதிப்பானது $10 பில்லியன்.


இந்த வழியில் ஏற்றுமதியை தொடர்ந்து பெருக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக் கைகளாக பெரிதும் குறிப்பிடப் படுவது ஒரே சீரான வரிமுறை. பருத்தி ஜவுளித் தொழில் சார்ந்தது போலவே 5 சதவீதம் என்ற குறைவான வரி எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து சதவீதமாக உள்ள இறக்குமதி வரி 10 சதவீதமாகவோ அல்லது இன்னும் கூடுதலாக வோ நிர்ணயிக்கப்பட வேண்டும்.


இதன் மூலம் சீனா, பங்களாதேஷ்வியட்நாம் நாடுகளின் இறக்குமதி பெரியதும் கட்டுப்படுத்தப்படும் என்பதே பலரின் எண்ணம். செயற்கை ரேயான் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் முன்னாள் தலைவர் ஸ்ரீரெய்ன் அகர்வால். இறக்குமதி அதிகரிப்பு என்பது இந்திய செயற்கை ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு பெரிய முட்டுக்கட்டை. இது உடனடியாக கவனித்து நீக்கப்பட வேண்டும்.


மேலும் உரிய தடுப்புநடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்செயற்கை ஜவுளி போட்டிகளைக் பொலிவு பெறும் என்கிறார்மொத்த துறையம் சரி மத்திய அரசு இத்துறையின் உதவுவதில் மெத்தனம் என்பதே அனைவரின் உள்ள து.


                                                                                                                              -                                                                                                                 சி.வேலுமணி.


 


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image