சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் முத்ரா கடன் திட்ட ம். சென்ற 2016-17-ல் 4.35 சதவீத மாக இருந்த வாராக் கடன் தற்போது 9.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மேற்கொண்டு எந்த வங்கியிலும் கடன் பெற முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடன் திட்ட விவரங்கள்:
மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு முத்ரா (மைக்ரோ யூனிட்ஸ் டெவலப் மெண்ட் அண்ட் ரீபைனான்ஸ் ஏஜன்சி) என்ற கடன் திட்டத்தைத்தொடங்கியது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களின் வளர்ச்சிக்காக இக்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கடன் திட்டம் 3 வகைகளைக் கொண்டது. ரூபாய் 50 ஆயிரம் வரையிலான கடன் திட்டம் 'திசு' எனப்படும். ரூபாய் 5 லட்சம் வரையிலான கடன் திட்டம் 'கிஷோர்' என்றும், ரூபாய் 10 லட்சம் வரையிலான கடன் 'தருண்' என்றும் அழைக்கப்படுகின்றன.
அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் 3.22 லட்சம் கோடி ஆகஸ்டு இறுதி வரை) கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி பேர் முத்ரா கடனைப் பெற்றுள்ளனர்.
வராக்கடன் அதிகரிப்பு:
ஒரு புறம் கடன் பெறுவோரின் எண்ணி க்கை அதிகரித்து வரும் வேளையில் அதை வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். இதனால் வராக்கடன் அதிகரித்து வருகிறது.
இது பற்றி வங்கி அதிகாரிகள் தெரிவித்த விவரங்கள் வருமாறு.
சிறு, குறுதொழில்களில் ஈடுபட்டுள்ள வர்களுக்கு பணம் தான் முக்கியப் பிரச்சி னையாக உள்ளது. பணம் இல்லாததால் பலர் தங்களது தொழிலை விரிவு படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் பலர் சுயதொழில் தொடங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இவ்வாறு தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் தான், மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, முன்னுரிமை அடிப் டையில் முத்ரா கடன் வழங்க வேண்டும் வயங்க வேண்டும் என மத்திய அரசு வலியக்கியதால் வங்கிகள் இக்கடனை தாராளமாக வழங்கின.
இதனால் ஏராளமானோர் வந்து கடன் பெற்றனர். இவ்வாறு பெற்றவர்களில் சிலர் ' முறையாக திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால் வராக்கடன் அதிகரித்து வருகிறது. கடந்த 2016-17-ம் ஆண்டில் 4.35 சதவீதமாக இருந்த வாராக்கடன் தற்போது 9.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதில் முதலிடத்தைப் பிடித்திருப்பது சிறு கடன்தான். இக்கடனில் 12.40 சதவீதம் வராக்கடனாக உள்ளது. இதற்கு அடுத்த படியாக கிஷோர் பிரிவில் 10.20 சதவீதமும், தருண் கடன் பிரிவில் 9 சதவீதமும் வராக் கடனாக உள்ளது.
என்ன காரணங்கள்:
முத்ரா கடன் பெறுவதற்காக மோசடி கணக்குகளும் வங்கிகளில் தொடங்கப்பட்டு ள்ளன. சுமார் 2,500 மோசடிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் 15 சதவீத கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக சண்டிகரிலும் ஆந்திரா விலும் அதிக அளவு மோசடி கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன.
முத்ரா கடன் வாங்க எவ்வித சொத்தையும் பிணையாக தர வேண்டியதில்லை. இதுவும் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.
இவ்வாறு கடனை திருப்பிச் செலுத்தாமல் வங்கயை வங்கியை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அவாகளுக்கு எதாகாலத்தில் தங்கள் தொழிலை விரிவு படுத்த எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது என்பதைப் புரிந்து கொ ள்ள முடியும். இவ்வாறு வங்கி அதிகாரிகள் செ தெரிவித்துள்ளனர்.
வங்கிகள் சிந்திக்க வேண்டும்:
மேற்கண்ட இந்த செய்தியில் இருந்து நாம் தெரிந்து நடந்து கொள்ள வேண்டிய பல தக வல்கள் உண்டு.
கடன் வாங்குவோர் திருப்பிச் செலுத் துவது என்ற உறுதி இருந்தால்தான் கடன் வாங்க முன் வர வேண்டும். ஏமாற்றும் நோக்குடன் அல்லது பெற்ற கடனை சரியாகப் பயன்படுத்தி அதிலிருந்து இலாபம் சம்பாதிக்க முடியாது என எண்ணுபவர்களை வங்கிகள் சரியாகக்கண்டறிய வேண்டும்.
தகுதியற்றவர்களுக்கு திட்ட இலக்கைப் பூர்த்தி செய்ய வங்கிகள் கடனை வாரி வழங்குவது என்பது உண்மையாகவே கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்த எண்ணு பவர்களை விலக்கி வைத்து விடும். அரசின் நல்ல திட்டங்கள் பல இதனால் பலவீனமாகி விடுகிறது.
- தஞ்சை தம்பி