மருத்துவ உலகையே புரட்டிப் போட்ட பிராக்டோ டெக்னாலாஜிஸ்

சாதாரணமாக அனைத்து வயதுப் 1 பிரிவை சேர்ந்த மனிதர்களுக்கும் உடலில் ஏதாவது சிறு குறைபாடு இருக்க லாம். அது தொடர்பாக சந்தேகங்கள் இருக்கும். உடலில் ஏற்பட்டுள்ள நோய்க்கு சிகிச்சை பெற சரியான மருத்துவரை அணுகவோ, ஆலோசனை பெறவோ முடியாமல் சிரமப்படுபவர்கள் உள்ளனர். நேரமின்மையும், சரியான மருத்துவ நிபுணரைப்பற்றிய விவரம் இன்மையும் காரணமாக இருக்கலாம்.


பெங்களுரைச் சேர்ந்தவர் “சசாந்த்” என்ற இளைஞர் ஜஜடி கல்லூரியில் பொறியியல் படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தார். அவரது பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றினார்கள்.


அவர்கள் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சசாந்த் படிப்பு முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டனர். ஒரே மகனான சசாந்த் இளமையிலேயே துடிப்பு மிக்கவராக விளங்கினார். சசாந்தின் தந்தைக்கு முழங்கால் தேய்மானம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.


அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிபுணரிடம் தொடர்பு கொண்டு தனது தந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் தொடர்பான சந்தேகங்களையும் தற்போது தரப்பட உள்ள அறுவை சிகிச்சை தொடர்பாக கருத்து (Second Opinion) கேட்க விரும்பி அனைத்து விவரங்களையும் கணினி வாயிலாக அனுப்பி வைத்து முயற்சி செய்கிறார்.


ஆனால் அவரால் ஆலோசனை பெற முடியவில்லை. இந்த நிகழ்வு சசாந்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தனது ஜஜடி கல்லூரி தோழரான அபினவ் லாலுடன் இந்நிகழ்வை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறார். அபினவ் லால் கணினியில் கை தேர்ந்தவர். இருவருக்கும் பொறி தட்டுகிறது. புதிய யோசனை தோன்றுகிறது.


தற்சார்பு மருத்துவ இணையதளம்:


ஒரு மருத்துவ இணையதளத்தை உருவாக்க வேண்டும். அதில் நோயாளி தேடும் நடுநிலையுடன் மருத்துவ நிபுணர்களின் சுயவிவரங்கள் தரப்பட வேண்டும். சரியான மருத்துவரை நோயாளி சந்திக்கவும் தரமான சிகிச்சை பெறவும் எளிதாக வழிவகை செய்யும் மென்பொருளை தயாரிக்க திட்டமிட்டனர். கணினி பொறியியலில் இறுதியாண்டு மாணவர்களாக இருந்த நிலையில் தங்களது எண்ணத்தை செயலாக்க தீவிரமாக முயன்றனர். இதன் விளைவாக பெங்களுரில் 2008ல் “பிராக்டோ டெக்னாலாஜிஸ்” துவக்கப்பட்டது.


மகத்தானதை செய்:


இன்று சர்வதேச அளவில் அதிவேகமாக வளரும் சுகாதார பராமரிப்பு நிறுவனமாக பிராக்டோ டெக்னாலாஜிஸ் உள்ளது. (pract-o means Practice Online) இவர்களது முயற்சி மருத்துவ உலகில் ஒரு முக்கியமான புத்தாக்கத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்துவிட்டது. தொழிலை விரிவாக்க தேவையான பங்குகள் கணிசமாக கிடைக்கத் தொடங்கின. கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச அளவில் பெரும் வளர்ச்சியை அடைந்து உள்ளனர். கணிசமான முதலீட்டை பெற்றுள்ளனர். உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகி உள்ளது.


வளர்ச்சியை துரிதப்படுத்திய கைபேசி:


கைபேசியின் பயன்பாடு அதிகரித்ததும் இவர்களுக்கு பெரும் சாதகமாக அமைந்தது எனலாம். நிறுவனத்தை தொடங்கிய போது இணையதள மருத்துவர்களை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாகவே இருந்தது. கைபேசி நோயாளிகளையும், மருத்துவர்களையும் ஒருங்கிணைக்க உதவிகரமாக அமைந்து விட்டது. 2008 ஆம் ஆண்டை கைப்பேசி புரட்சியின் ஆரம்பகட்டம் எனலாம்.


 சுமார் இரண்டு லட்சம் மருத்துவ நிபுணர் கள் இவர்களுடன் இணைந்து உள்ளனர். சுமார் எட்டாயிரம் மருத்துவமனைகள் இவர்களுடன் சுகாதார பராமரிப்பு பணியில் இணைந்து உள்ளனர். இணையதளத்தில் இவர்களது சேவையை சுமார் பத்து மில்லியன் நுகர்வோர் தேடுகின்றனர். அதிக மருத்துவர்களை இணைத்து தொடர்ந்து விரிவாக்கத்தில் கவனம் செலுத்தியதால்தான் இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டது எனலாம்.


இணையதளம் வாயிலாக இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களை எளிதில் அணுக வழிவகை ஏற்பட்டு உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உலகிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவர் சந்திப்புகளை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு சுமார் 40 மில்லியன் நோயாளிகள் மருத்துவர்களை இணையதளம் வாயிலாக சந்திக்க தொடர்பு கொள்கின்றனர்.


லட்சக்கணக்கான நோயாளிகள் தங்கள் நோய் தொடர்பான சந்தேகங்களை கேட்கிறார்கள். 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டு விடுகிறது.


இணையத்தில் மருத்துவரிடம் கலந்துரை யாட முடிகிறது. முக்கிய நகரங்களில் முழுஉடல் பரிசோதனை செய்து கொள்ள முடிகிறது. நோயாளிகளுக்குத் தேவையான தரமான மருந்துகளை இணையத்தில் உத்திரவிட்டால் (Order) வீட்டின் கதவிற்கே வந்து விநியோகம் (Door Delivery)செய்கிறார்கள்.


நன்றி தெரிவித்த இளைஞன்:


ஒரு சமயம் சசாந்த் பெங்களூர் சென்றிருந்த போது ஓரு இளைஞர் “பிராக்டோ ”, “பிராக்டோ ” என்று சத்தமிட்டபடியே சசாந்தை நோக்கியபடி விரைந்து வந்தார். பிராக்டோவின் சேவைக்காக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றவர். எனது பாட்டி உடல்நலக்குறைவால்  அவதிப்பட்டு வந்தார்.


அவருக்கு என்ன உடல்நல பிரச்சனை என்று சரியாக கண்டறிய முடியாமல் எங்கெங்கோ சென்றும் சரியான சிகிச்சை பெற முடியாமல் நம்பிக்கை இழந்து அல்லாடிக் கொண்டு இருந்தோம். பின்னர் அதிர்ஷ்டவசமாக பிராக்டோவில் தொடர்பு கொண்டோம். வியாதியை கண்டறிந்து சரியான சிகிக்சை பெற்று குணமடைந்தார் என்றார் மகிழ்ச்சியுடன். பொதுவாக சரியான மருத்துவரை சந்தித்து பரிந்துரையை ஏற்கும் போது நோய் குணமடைகிறது.


புரியாத மருத்துவ வாசகங்கள்:


நோயால் தவிக்கும் எளிய மனிதர்களுக்கு சரியான மருத்துவரை அணுக வாய்ப்பு கிடைக்கிறது. மருத்துவ வாசகங்கள் எளிமையாக உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ மனைகள், மீதான நம்பிக்கை நோயாளிகளுக்குகிடையே அதிகரிக்க முயற்சி மேற்கொள்கிறார்கள். இவர்களது அணுகுமுறை வெளிப்படைத் தன்மையுடன் முழுமையான தகவல்களுடன் நுகர்வோர்களுக்கு உதவிகரமாக உள்ளது.


மருத்துவர்களுக்கு மென்பொருள்:


மருத்துவர்களுக்கு மென்பொருள்: மருத்துவர்களையும், நோயாளிகளையும் இணைக்கும் பாலமாக பிராக்டோ செயல்படுகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், சிகிச்சையகம், (Clin- ic) இணையதள நிர்வாகம் தொடர்பாக பிரத்யேக (B2B) மென்பொருள் உள்ளது. இதுதவிர நோயாளிகள் இருக்குமிடத்தில் சிறப்பு மருத்துவ நிபுணர்களை தேடிப் பெறுவதற்கு (B2C) தனியாக மென்பொருள் உள்ளது. இதன் தேவை அதிகரிப்பால் பிராக்டோவின் வருவாய் ஆண்டிற்கு ஆண்டு பன்மடங்கு பெருகி வருகிறது.


சிறப்பு மருத்துவர்கள் இரைப்பை குடல் நிபுணர், இதய நோய் நிபுணர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், குழந்தை மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் ஆவர். இணையத்தில் தேடி மருத்துவ ஆலோசனை பெறும் முறை தற்போது பரவலாகி வருகிறது.)


வெளிநாடுகளில் பிராக்டோ:


சிங்கப்பூர், பிரேஸில், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நான்கு நாடுகளில் பிராக்டோவின் சேவை வசதிகள் உள்ளன. லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் தடம் பதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், சேவைகள், கட்டணங்கள் தொடர்பான தகவல்களை முழுமையாக பெற முடிகிறது. இதன் மூலம் மருத்துவ உலகில் பிராக்டோ முக்கிய பங்கு வகிக்கிறது.


எந்த தனிமனிதரையோ, நிறுவனத்தையோ முன்மாதிரியாக நாங்கள் பின்பற்றவில்லை. எங்களது அசலான யோசனைகளே நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்று நீடிப்பதற்கும், முன்னோக்கி செல்வதற்கும் முக்கிய காரணியாக உள்ளது பெருமகிழ்ச்சியை தருகிறது என்கிறார்.


இந்தியாவில் பதிவு பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 9,38,861 ஆகும். நாட்டில் அதிகமாக தேடப்படும் சிறப்பு மருத்துவர்கள் இரைப்பை குடல் நிபுணர், இதய நோய் நிபுணர், காது,மூக்கு, தொண்டை நிபுணர், குழந்தை மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் ஆவர். இணையத்தில் தேடி மருத்துவ ஆலோசனை பெறும் முறை தற்போது பரவலாகி வருகிறது.


வட்டார மொழி பயன்படுத்தல்:


நாட்டின் முக்கிய நகரங்களில் பிராக்டோ சேவை கிடைக்கிறது. அந்தந்த மாநிலங்களின் வட்டார மொழிகளிலேயே உரையாடும் வசதி உள்ளது. தமிழ், கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட வட்டார மொழியை தேர்வு செய்து அந்த மொழியில் உரையாட முடியும்.


நோயாளி மருத்துவரிடம் உரையாடல் முடித்தபின்னர் பின்னூட்டம் பெறப்படுகிறது. (Feedback) நோயாளிக்கு தொடர்புடைய மருத்துவரின் சேவைத்தன்மை குறித்து பல் வேறு வழிகளில் பின்னூட்டம் பெறப்படுகிறது. இதுதவிர நோய் கண்டறியும் மையங்கள் (diagnostic centre) உடற்பயிற்சி மையங்கள், ஆரோக்கிய மையங்கள் உள்ளன.


இவர்களது மென்பொருளை பயன்படுத்து வதால் மருத்துவர்கள், மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள் சந்தா கட்டுகின்றன. இது பிராக்டோவிற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. இது லாபகரமானதாக உள்ளது. நோயாளிகளிடம் பிராக்டோ கட்டணம் பெறுகிறது. பின்னர், மருத்துவர்களுக்கு வாராந்திர அடிப்படையில் கட்டணம் வழங்குகிறது.


சசாந்தின் நண்பர் அ பினவ்லால் துவக்கத்தில் சர்வதேச நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தும் செல்லவில்லை. தனது பெற்றோர்களை சமாதானப்படுத்தி பிராக்டோவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் பிராக்டோவின் இணை நிறுவனர் ஆவார்.


முதல் ஆண்டு கடினமானதாகவும், மெதுவாகவும் இருந்துள்ளது. ஒரு ஆண்டு சந்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டார்கள். இணையதள மருத்துவ தொழிலில் உள்ள புதுமை என்னவெனில் மருத்துவர்களுக்கு தனியாக மென்பொருள் உள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மருத்துவர்கள் இணைவதால் அதிகமான நோயாளிகளுக்கு சேவை செய்வதால் அவர்களின் வருவாய் அதிகரிக்கிறது.


லட்சக்கணக்கான நோயாளிகள் தங்கள் நோய் தொடர்பான சந்தேகங்களை கேட்கி றார்கள். 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டு விடுகிறது. மருத்துவ பிரச்னைகளுக்கு ஆலோசனைகளும், தீர்வுகளும் பெறுகிறார்கள்.


சட்டப்பூர்வமானது:


இன்று இணையம் வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை . நெருக்கடியான அவசர தருணங்களுக்கு இணையதள ஆலோசனை களுக்கு தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். ஒருவர் விபத்தில் காயமடைந்து விட்டார் அல்லதுஉயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். அப்போது இணையதள ஆலோசனைக்கு முயற்சிக்காமல் நோயாளிக்கு முதலுதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தப்படுகிறது.


லட்சக்கணக்கான நோயாளிகளின் கேள்வி களுக்கு பதில் தரப்பட்டு உள்ளது. அருகில் மருத்துவர் இல்லாத நிலையில், நேரமின்மை காரணமாக சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. பிராக்டோ மென்மேலும் வளர வாழ்த்துவோம்.


தி.சுவாமிநாதன். நாமக்கல்.



 


 


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image