இந்திய பொருளாதாரம் பின்னடைவுக்குத் காரணங்கள் என்ன?

அசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த பாஜக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றால் தொழில்துறை மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்தன. குறிப்பாக சிறு, குறு மற்றும் - நடுத்தர தொழில்கள் பெருமளவு இழப்பைச் சந்தித்ததும், அதில் பல நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டதும் நடந்தது.


இந்தநிலையில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல், ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக குறைந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. நுகர்வோரின் தேவை மற்றும் தனிநபர் முதலீடுகள் போன்றவை திடீரென குறைந்துள்ளது. இதே சென்ற 2018 ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


                                                                                   


பொதுவாகவே பொருளாதார மந்தநிலையில் நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்து விடுகிறது. இதனால் உற்பத்தியில் தேக்க நிலை ஏற்படுகிறது. பணப்புழக்கம் இல்லாமல் போய்விடுவதால், வர்த்தகமும் பாதிக்கப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள தொழில் துறைகள் அனைத்தும் இதுபோன்ற மந்த நிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.


வாகனத்துறையில் உடனடியாக இது பிரதிபலிக்கத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வருகிறது. ஏற்கனவே தயாரித்த வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதால் புதிய கார்களை தயாரிக்கும் பணியை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.


இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, தென்கொரிய நிறுவன மான யுண்டாய், ஜப்பான் நிறுவனமான டொயோட்டோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலை வேலை நாட்களை குறைத்துக் கொண்டன. சில நிறுவனங்கள் ஒப்பந்த தொழிலாளர்களை குறைக்கும் நடவடிக்கையிலும் இறங்கின. இந்த நிலை நீடித்தால் வேலை இழக்க நேரிடும் என தொழிலாளர்கள் பலரும் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.


இது ஒருபுறம் இருக்க உலக வணிகத்தில் இரு பெரும் நாடுகளான அமெரிக்காவும் சீனாவும், நடத்தும் வர்த்தகப்போர் காரணமாக ஆசியாவின் பொருளாதாரமும் மந்தநிலையை அடைந்துள்ளது. அண்மையில் சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.


இதுபோன்ற மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் உயரும் கச்சா எண்ணெய் விலையும், பற்றாக்குறையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஒரு நீடித்த தேக்கநிலையை உருவாக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.


உள் நாட்டின் காரணிகள் என்று பார்க்கும்  போது, பருவமழை பொய்த்துப்போவதால் விவசாயம் குறைந்து அதனால் பொருளாதாரத்தின் மீதான பாதிப்பு என சிக்கல்கள் அதிகரிக் கின்றன. இந்திய ஏற்றுமதி மற்றும் உள் நாட்டு வணிகம் என அனைத்துப் பிரிவுகளிலும், 2019-20 ஆம் நிதியாண்டில் 30 விழுக்காடு அளவுக்கு வணிகம் பாதிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. ஏற்றுமதிவரி, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் இயங்கும் தொழிற் சாலைகளை மூடப்பட்டால் அரசு எப்படி வரி வசூல் செய்யும் என்பதும் ஒரு கேள்விக் குறியே.


ஒரு பொருள் உற்பத்தியின் போது நிலைகளில் தனித்தனியாக ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்ற கட்டாய இருக்கிறது. இப்படி பல சிக்கல்கள் இருக்கும் என்ற கருத்தில்தான் ஜிஎஸ் டியை நடைமுறைக்குக் கொண்டு வரும்போதே எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இதனால் மாநில சுயஆட்சி மற்றும் வருவாயை இது பாதிக்கும் என்றும் எச்சரித்தன. ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் நடை முறைப் படுத்திய மத்திய அரசு தற்போது 37 ஆவது முறையாக ஜிஎஸ்டி கூட்டத் தைக் கூட்டி தீர்வுகளை காண முயற்சிக்கிறது.


தமிழகத்தில் பாதிப்பு இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் அதிகமாக பிறமொழி பேசும் மக்கள் வசிக்கும் இடமாக உள்ள திருப்பூர் தொழில் நகரம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும் நகரமாகும். பின்னலாடைத்தொழில் முதன்மை வகிக்கும் இந்த நகரம் ஆடை உற்பத்தி, உள் நாட்டு வணிகம், வெளிநாடு ஏற்றுமதி என கொடிகட்டிப்பறந்த நகரம். கடந்த நிதி ஆண்டில் 18-19 ஆம் ஆண்டில் பின்னலாடை ஏற்றுமதி வணிகம் 26 ஆயிரம் கோடி ருபாய்க்கு நடைபெற்றுள்ளது.


அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வணிகப்போர் ஆகியவை வர்த்தக நம்பிக்கையை ஓரளவுக்கு சீர்குலைத்துள்ளது. இதனால் தற்போது யாரும் முதலீடு செய்யத்தயாராக இல்லை.



அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டித்தரக்கூடியது பின்னலாடை ஏற்றுமதித் தொழில். ஆனால் உள் நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 21ஆயிரம் கோடியைத்தான் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையால் இந்த ஆண்டு 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


திருப்பூர் தொழில் நகரத்தைப் பொறுத்தளவில் தற்போதைய நிதி நெருக்கடியால் 24 மணிநேரமும் இயங்கும் தொழிற்கூடங்கள் 12 மணி நேரங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் 2 இலட்சம் பேருக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி 60 விழுக்காடு வரை குறைந்திருக்கிறது. இந்த நிலை திருப்பூர், கோவைக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள முக்கியத்தொழில் நகரங்களுக்கும் இதே நிலைதான் காணப்படுகிறது.


பொருளாதார வல்லுநர்களின் கருத்துகள் இதுபோன்ற பொருளாதார தேக்க நிலை வாகனத்துறையில் மட்டுமல்ல, இந்திய நுகர்வோர் சந்தையிலும் காணப்படுகிறது. இதுகுறித்து பிரிட்டானியாவின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி கூறுகையில், 6 விழுக்காடு வளர்ச்சி என்பது சற்று கவலை அளிப்பதாக உள்ளது.


5 ரூபாய் விலைகொடுத்து பிஸ்கட் வாங்கவே வாடிக்கையாளர்கள் இரண்டுமுறை யோசிக்கிறார்கள். கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால் அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்.


பந்தன் வங்கியின் முதன்மை பொருளாதார வல்லுநரான சித்தார்த்த சன்யால் கூறும்போது மந்த நிலை எதிர்ப்பார்த்ததைவிட வலிமை மிக்கதாய் உள்ளது. நுகர்வு என்பது குறைந்து விட்டது. இந்தியப்பொருளாதாரத்திற்கு வலுவான புள்ளியாக அமைவது நுகர்வுதான் எனக்குறிப்பிட்டுள்ளார்.


ஜியோஜிட் நிதிச்சேவையின் பொருளா தார வல்லுநரான தீப்தி மேத் யூ கூறும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 விழுக்காடாக குறைந்து விட்டது என்பது உண்மையில் மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தியப்பொருளாதாரம் இன்னும் மீட்புப்பாதையில் அடியெடுத்து வைக்கவில்லை என்பதையே இந்த எண்ணிக்கை சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித் துள்ளார். நுகர்வு என்பது இல்லாததே ஒட்டு மொத்த மந்தநிலைக்குக் காரணம் என்கிறார்.


ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமானத் துறை மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார். ஆட்டோ மொபைல் துறையில் இது வரை 4 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக தகவல்கள் வருவது கவலை அளிக்கிறது. இது போன்ற பல்வேறு விதமான காரணங்களால் பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.


குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தின் லான்சன் டொயோட் டோ தொழிலதிபரின் மனைவி ரீட்டா லங்கா லிங்கம் தற்கொலை செய்து கொண்டதைக் கூறலாம். இதேபோல் கர்நாடகத்தை சேர்ந்த காஃபிடே நிறுவனர் வி.கி.சித்தார்தா கடன் தொல்லையால் உயிரிழந் ததையும் குறிப்பிடலாம். ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலை காணப்படுகிறது. சூரத் நகரில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டது எனப்பட்டியல் நீள்கிறது. கட்டுமானத் துறையைப் பொறுத்தளவில் சென்னையில் மட்டும் 2 லட்சம் வீடுகள் ஓ.எம்.ஆர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு அவற்றில் சுமார் ஒரு லட்சம் வீடுகள் காலியாகவே உள்ளதும் தேக்க நிலைக் காரணம் தான் என்கிறார். |


| இந்திய ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிகம் என அனைத்துப்பிரிவுகளிலும், 2019-20 ஆம் நிதியாண்டில் 30 விழுக்காடு அளவுக்கு வணிகம் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் குறிப்பிடுகையில், நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேக்க நிலை நிலவுவதாகவும், ஒட்டு மொத்த நிதித்துறையும் இது போன்றதொரு சூழலில் இதுவரை சிக்கியதில்லை என்கிறார். மேலும் தனியார் துறை நிறுவனங்களின் தயக்கங்களைப்போக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறிய அவர், பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடைமுறை கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்து பொருளாதார நிலைகளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.


இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அண்மையில் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் தொழில்துறையில் வலிமையான தொழிலாளர்களின் எண்ணிக்கையையும், மிக வலிமையான நுகர்வோர் நம்பிக்கையையும், நாம் கொண்டிருக்கிறோம்.


எனவே வாங்கும் சக்தி இன்னும் வலிமையாகவே உள்ளது. அதேநேரத்தில் பிரிக்ஸிட், அமெரிக்கா மற்றும் சீனா இடை யிலான வணிகப்போர் ஆகியவை வர்த்தக நம்பிக்கையை ஓரளவுக்கு சீர் குலைத்துள்ளது. இதனால் தற்போது யாரும் முதலீடு செய்யத்தயாராக இல்லை. முற்றிலும் வீழ்ச்சியடைவதற்கு முன்பாக நம் தீர்வு காணமுடியுமா என பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.


ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ், இந்தியாவின் ராஜீவ்குமார் வளர்ச்சி குறைவதையும், நிலையற்ற உலக பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு உள்நாட்டு உற்பத்திபொருட்களை நாம் வாங்க வேண்டும் எனக்கூறினார். மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வலிமையான நடவடிக்கைகள் தேவை என்றும் கூறிய அவர் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் மூன்றாவது முறையாக குறைக்கப் பட்டிருப்பதால், அதனால் நேர்மறை விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.


இந்த நிலையில் பொருளாதார மந்த நிலையால் பங்குச்சந்தையும் பாதிப்புக்குள்ளாகியது. ஜூன் 30 ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள் நாட்டு வளர்ச்சி என்பது 5 விழுக்காடாக மட்டுமே உள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மந்த நிலையை சரிசெய்யும் நோக்கில் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்தார். இந்த அறிவிப்பின் காரணமாகவும் பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்குகள் சரிவைச்சந்தித்தன என்பதையும் கவனிக்க வேண்டும்.


 இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித் ததையும் நாம் கணக்கில் 4 பும் நாம் கணக்கில் சித்தார்த்த எடுத்துக் கொள்ளலாம். அருண் ஜேட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பொருளாதாரம் தெரியாது என்றும், பிரதமர் மோடி ஏழைகளுக்கு சமையல் எரிவாயு போன்ற திட்டங்களைக் 'கொண்டு வந்தாலும் பொருளாதார மேதைகளை பயன்படுத்தத்தவறி விட்டதாகதெரிவித்தார். நரசிம்ம ராவ், சந்திரசேகர் ஆகியோரின் காலத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து


 இப்படி பொருளாதார வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் ஒருபுறம் உற்பத்திபொருட்களை கருத்துகளை பதிவு செய்திருந்தாலும் . இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னாள் பாரதப்பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன்சிங் கூறியதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


ஐந்து முக்கிய கூறுகளை அவர் முன் வைக்கிறார். முதலாவதாக சிறிது காலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது, வேளாண்மையை புதுப்பித்து கிராமப்புற நுகர்வை அதிகரிக்கச் செய்வது, மூலதன உருவாக்கத்திற்கு ஏற்றவகையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, ஜவுளி, ஆட்டோ மொபைல், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளை புதுப்பித்து அதற்குத் தகுந்தபடி சிறு, குறுந் தொழில்களுக்கு எளிதில் கடன் கிடைக்கச் செய்வது. 


சீனா, அமெரிக்க வர்த்தகபோர் முற்றியுள்ள நிலையில், இந்த நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் அதிக கவனம் செலுத்துவது என்கிறார். ஆக, இப்படி தமது யோசனை ஏற்கப்பட்டால் 3 அல்லது 4 ஆண்டுகளில் இந்தியா சன்யால் ' மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்று மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவிக்கிறார்.


பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சரின் நடவடிக்கை


கடந்த மாதம் ரஷ்ய நாட்டுக்குச் சென்றபிரதமர் மோடி விலாடிவோஸ்டாக் நகரில் நடந்த 5 ஆவது கிழக்குப் பொருளாதார அமைப்பில் உரையாற்றினார். அபோது இந்திய அரசு சார்பில் ஃபார் ஈஸ்ட் எனப்படும் தூரக்கிழக்குப்பகுதிகளின் வளர்ச்சிக்காக ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதற்கான அறிவிப்பை நரேந்திர மோடி வெளியிட்டார். நம் நாட்டில் பொருளாதார மந்த நிலை காணப்படும் போது வெளிநாட்டுக்கு கடன் உதவி செய்வது எந்த விதத்தில் சரி என்பதும் சாமானிய மக்கள் மத்தியில் எழுப்பப்படும் வினாவாக இருக்கிறது.


நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறி சில முக்கிய அறிவிப்புகளை கடந்த மாதம் 14 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் ஒட்டுமொத்த ஏற்றுமதியையும் அதிகரிக்கச் செய்ய ஜிஎஸ்டி வரியை எளிதாக்குவதாகவும், வங்கிக்கடன் மூலம் ஏற்றுமதி செய்வோருக்கு காப் பீட்டுத் தொகையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


 மேலும் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 68 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி வர்த்தகத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


கடந்த காலங்களில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியுடன் மோதல், அதனால் ஆளுநர்களின் அதிருப்தி மற்றும் பொறுப்பிலிருந்து விலகல் என பல பிரச்சனைகள் நடந்தேறி உள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல் பிரச்சனைகளை மூடிமறைப்பதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் ரிசர்வ் வங்கியின் சேமிப்பிலிருந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசு கேட்டுப் பெற்றுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.


ஆக கொஞ்சம் கொஞ்சமாக பொருளா தார நடவடிக்கைகள் மேம்பட்டு வருவதாகக் பாஜக அரசு கூறினாலும், இவை அனைத்தும் நல்ல முறையில் நடந்தேறுமா என்பதுதான் தொழில்துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், பாஜக ஆட்சியில் எப்போது என்ன நடக்குமோ என்பது தெரியாததே நிதர்சன உண்மையாக இருக்கிறது.


திருப்பூர் தொழில்நகரத்தைப் பொறுத்தளவில் தற்போதைய நிதி நெருக்கடியால் 24 மணிநேரமும் இயங்கும் தொழிற்கூடங்கள் 12 மணி நேரங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் 2 இலட்சம் பேருக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது.


நாட்டின் 17ஆவது மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்பே பொருளாதார தேக்கம் குறித்து பல்வேறு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தல் வெற்றிக்குப்பிறகு மீண்டும் பொறுப்பேற்ற பாஜக அரசு பொருளாதார வளர்ச்சி மீதும் அதிலுள்ள சிக்கல்கள் மீதும் தன் கவனத்தைச் செலுத்தவில்லை . மாறாக ஒரே நாடு, ஒரே மொழி, காஷ்மீரில் சிறப்பு அதிகார நீக்கம் உள்ளிட்ட மற்றவற்றில் கவனத்தைச் செலுத்தியது. இனிமேலாவது அனுபவம் மிக்க பொருளாதார வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.


பொதுவாக பொருளாதார வளர்ச்சி என் பது அந்நாட்டின் மனித வளம், இயற்கை வளம், மூலதன உருவாக்கம் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த அடிப்படையில் செயல்பட்டால், பொருளாதார தேக்க நிலை என்பது தற்காலிக மானதுதான் என்றும் அதிலிருந்து இந்தியா சில ஆண்டுகளில் விடுபடலாம் என்பதும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


- மேகலைவாணன்.


 


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image