வேகமாக வளரும் வேளாண் தொழில் நுட்பத் துறை

இருபது முப்பது ஆண்டுகளுக்கு இ.முன்பெல்லாம் உற்பத்தி, வர்த்தகம் சேவை என்ற மூன்று வகையான தொழில் மட்டுமே இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அதிகம் நடைபெற்றுவந்தன. ஐரோப்பிய நாடுகள் போன்ற மேற்கத்திய அயல் நாடுகளில் மட்டுமே தொழில் நுட்பங்கள் கண்டுபிடித்து அவற்றின் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகி வந்தன.


அந்தவழியில் தற்போது தொழில் நுட்பத்துறை என்பது இந்தியாவிலும் மிக சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவ தொழில் நுட்பத்துறை, மின்னணு கருவிகள் தொழில் நுட்பத்துறை என்ற துறைகளின் வரிசையில் சமீபமாக பாரமபாய தொழிலான விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களும் பாந்த தொழில்நுட்பங்களும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டுள்ளன.


இந்திய வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த புதிய நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் மவுசே அதற்கு ஆதாரம். இந்த ஆண்டின் தொடக்க ஆறுமாதங்கள் மட்டும் 248 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலான முதலீடுகள் புதிய வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இத்துறைக்கு கிடைத்த முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டில் 300 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேளாண் தொழில் நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையும் அண்மை காலங்களில் ஆண்டுக்கு 25 சதவீதம் வரை அதிகரித்துவருகிறது.


இன்றளவில் இந்திய விவசாய தொழில்நுட்பத்துறையில் 450 க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் (Startups) உள்ள ன என நான்காம் அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சமீப ஆண்டுகளில் இந்திய வேளாண் தொழில்நுட்பத்துறையில் சர்வதேச முதலீடுகளும் உள் நாட்டு துறை சார்ந்த முதலீடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த அமைப்பின் ஒரு ஆய்வு வேளாண் தொழில்நுட்ப தலைமை செயலதிகாரிகள் பலர், தொழில்நுட்ப உலகின் அடுத்து வரும் ஆண்டுகளில் தாங்கள் ஒரு தனி அடையாளம் பெறுவோம் என உறுதியாக நம்புகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.


சென்ற சில ஆண்டுகளாக விவசாயிகள் மத்தியில் தொழில் நுட்பங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து, வேளாண் தொழில்நுட்பத்துறை வாடிக்கையாளரை நேரடியாக சார்ந்த நிலை மாறி, வியாபாரிகள் வட்டத்தில் சிறப்பான வரவேற்பு பெற்று அதன் மூலம் வாடிக்கையாளரை சென்றடையும் நிலையினை அடைந்துள்ளது.


இதன் விளைவாக மேலும் பல தொழில்நுட்ப வல்லுநர்களும் இத்துறைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கருத்துக்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.


ஐஐடி (IIT) மற்றும் என் ஐடிஐ (NITI) உள்ளிட்ட முன்னணி தொழில் நுட்ப அமைப்புகள் சார்ந்த அறிஞர்கள் இந்திய விவசாயத்தில் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு பெருக வேண்டிய கட்டாயம் இன்று நிறையவே உள்ளது.


பருவ நிலை பாதிப்புகள் , பூச்சி பாதிப்புகள் போன்ற சவால்களில் இருந்து மீள்வதில் தொடங்கி உற்பத்தி செய்த விளைப்பொருள்களை சேதாரமின்றி பாதுகாப்பது வரை பலவற்றிற்கும் தொழில்நுட்பத்தின் துணை அவசியமாகிறது.


இன்டர்நெட் சேவையை விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் வாயிலாக வழங்கி அதன் மூலம் பாசன முறைகளை கட்டுப்படுத்துவது, மண்ணின் தன்மையை கண்காணிப்பது, உற்பத்தியை பெருக்குவது போன்றவை இன்றைய வேளாண்மைக்கு மிகவும் தேவையானது.


எனவே இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things) நுட்பம் முதல் பல நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தின் வளர்ச்சியை பெருக்குவது நம் எல்லோரின் கடமை என்கிறார்கள் முன்னணி தொழில்நுட்ப நிலையங்களின் நிபுணர்கள்.


இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் திறமை அபாரமானது. குறிப்பாக வேளாண் தொழில் நுட்ப திறன்களும் சிறப்பு வாய்ந்தவை. இந்திய விவசாயத்துக்கு மட்டுமின்றி அயல்நாட்டு விவசாயத்துக்கும் சிறப்பான வளர்ச்சிகளை தரக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் இங்கு ஏராளமாக உள்ளது.


சமீப ஆண்டுகளில் பல முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இந்திய வேளாண் நுட்ப நிறுவனங்களை முதலீடு செய்து வருகின்றன என்று தெரிவிக்கிறார் திகிர்ஷி (Thekrishi) என்னும் வேளாண் சார் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஆஷிஷ்மிஷ்ரா.


வேளாண்மையில் தொழில் நுட்பத்தின் அவசியம் குறித்து துறை நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், இந்திய விவசாயம் தொழில்நுட்பம் மூலம் புதிய பரிமாணம் காண இன்றைய சூழல் தான் சிறந்த சூழல்.


விவசாயிகளுக்கும், தொழில்நுட்பத்துக்கும் பெரிய இடைவெளி ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போதோ ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்கள் வாயிலாக 4ஜி தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பரிச்சயமாகிவிட்டது.


ஸ்மார்ட் போன் முதல் சாதாரண செல்போன் வரை பலவற்றை கொண்டு மோட்டார்களை இயக்குவது உள்ளிட்ட நுட்பங்கள் வரவேற்பில் உள்ளன. டிஜிட்டல் வழி பரிமாற்றங்களும் விவசாயிகள் பலருக்கு இன்று அத்துப்படியாகியுள்ளது.


அரசும், தொழில் நுட்பத்துறையும், முதலீட்டாளர்களும் காட்டும் ஈடுபாடு வரும் காலங்களில் வேளாண்துறையில் நிச்சயம் நல்ல வளர்ச்சிகளைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் துறை நிபுணர்கள்.


இதன் மூலமாகவே மேலும் தொழில்நுட்பத்தின் பங்கை விவசாயத்தில் அதிகரிக்கும் எண்ணம் ஒரு பக்கம் மத்திய அரசும் முயன்று வருகிறது. புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் இழப்புகளை குறைத்து இலாபத்தை பெருக்குவதை முக்கிய இலக்காக அரசு கொண்டுள்ளதாக தொழில் வர்த்தக அமைச்சகமும் சமீபத்தில் தெரிவித்துள்ளது.


அதன் ஒரு நிலையாக புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளும் ஸ்டார்ட் -அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கவும் அரசு ஈடுபாடுகாட்டி வருகிறது. இந்த வகையில் வேளாண் தொழில் நுட்ப செயல்பாடுகள் பெருக வேண்டிய சரியான தருணம் இது தான் என்று கூறுகிறார்கள்.


அரசும், தொழில் நுட்பத்துறையும், முதலீட்டாளர்களும் காட்டும் ஈடுபாடு தொடரும் காலங்களில் வேளாண்துறையில் நிச்சயம் நல்ல வளர்ச்சிகளை கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் துறை நிபுணர்கள்.


- வேலுமணி.


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image