இந்தியாவின் வலிமைமிக்க தூண்களாக * இளைஞர்களை உருவாக்க முடியும்
வேல்யூ பிளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஏ.சண்முகசுந்தரத்துடன் ஒரு நேர்காணல்.
ல்லையில் ஒரு சாதாரண குடும்பத்தில் றெபிறந்து வளர்ந்தவர். இன்று மாணவர் கள், இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தன்முனைப்பு பயிற்சி, தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மன நல ஆலோசனை என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார் சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள வேல்யூ பிளஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஏ.சண்முகசுந்தரம். "அன்று எம்.எஸ்.உதய மூர்த்தியால் திசை அறிந்தேன். இன்று இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறேன்” என்கிற அவரது நேர்மறைச் சிந்தனை கொண்ட நேர்காணல் இதோ!
1500க்கும் மேற்பட்ட தன்முனைப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ள நீங்கள், இந்தக்கால இளைஞர்களிடம் ஒரு பாசிட்டிவ் சிந்தனையை தூண்டி வருகிறீர்கள். உங்களுக்கு நான் இந்தச் சிந்தனை எப்படி வந்தது? முதலில் உங்களது குடும்பப் பின்னணி குறித்து கூறுங்கள்?
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பிறந்த நான், அங்கு 8 ஆம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் தூத்துக்குடியில் உயர்நிலைக்கல்வி பயின்றேன். 1975 ஆம் ஆண்டு பியூசி படிப்பை அங்குள்ள காமராஜர் கல்லூரியில் படித்தேன்.
பொருளாதார சூழல் காரண மாக எனது பெற்றோரால் உயர்கல்வி படிக்கவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் ஊரில் உள்ள தொடர்வண்டி நிலையம் சென்று அங்கு வந்து செல்லும் மக்களை வேடிக்கை பார்த்து பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன்.
தொடர் வண்டி நிலையம் சரக்குப் பெட்டகங்களில் உப்பு மூட்டைகளை ஏற்றி, இறக்குவதுமாக ஒரே பரபரப்பாக இருக்கும். இதில் தொழிலாளர்கள் செய்யும் வேலை களை வேடிக்கை பார்த்தபடி இருப்பேன். இதனை கவனித்த அதிகாரிகள், அவர்களுக்கு உதவும் வகையில் சில வேலைகளைச் செய்து தரும்படி என்னிடம் கோரினார்கள். அதனையும் செய்து முடித்தேன். |
வண்டியில் ஏற்றப்படும் சரக்குகள் குறித்த கணக்குவழக்குகளையும் பார்க்கச் சொன்னார்கள். இப்படி தொடர்வண்டி நிலையத்தின் அனைத்து வேலைகளையும் நான் செய்யத்தொடங்கினேன். இப்படி எப்போதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருக்க வேண்டும் என நினைப்பேன்.
இந்த நிலையில்தான் தொடர்வண்டிநிலையத்துக்கு வந்த அகஸ்தியம்பள்ளியைச் சேர்ந்த உப்பு வணிகர் கே.எம்.வேலாயுதம் செட்டியார் எனது சுறுசுறுப்பையும், உழைப்பையும் பார்த்து என்னை அவரது நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். நான் பி யூசி வரை படித்திருந்ததால் மாதம் 60 ரூபாய் சம்பளம் கொடுத்தார். இப்படி இருந்த நிலையில்தான் எனது தாய் மாமா அங்கு வந்தார். ஏன் இப்படிச் சிரமப்படுகிறாய்? என்னுடன் வா, உனக்கு கோழிப்பண்ணை அமைத்துத் தருகிறேன் எனச்சொல்லி நெல்லைக்கு அழைத்துச் சென்றார்.
1976 ஆம் ஆண்டு அவர் அமைத்துக் கொடுத்த கோழிப் பண்ணையை கவனித்தபடியே அவரது வீட்டில் தங்கியிருந்த நான், டைப்பிங் மற்றும் ஷார்ட் ஹாண்டில் பயிற்சி முடித்தேன். ஹிந்தி மொழியில் மத்திமம் தேர்வு எழுதி அதிலும் நாம் வெற்றி பெற்றேன்.
அதன் பிறகு வங்கித் தேர்வு எழுத1989 முடிவு செய்தேன். இரண்டாவது முறையாக வங்கித்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். இப்படி 1978 ஆம் ஆண்டு தேனா வங்கியில் பணியில் சேர்ந்தேன்.
இப்படியாக வேலை கிடைத்ததும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்அதிலும் குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பேன். எத்தனையோ இளைஞர்கள் இந்த சமூகத்தில் ஒரு நல்லதன்முனைப்புவழிகாட்டி இல்லாமல் அவர்களது வாழ்வு திசைமாறிப்போவதாக உணர்ந்தேன்.
இது பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண் டிருக்கும் போதுதான் 1988 ஆம் ஆண்டு .எஸ்.உதயமூர்த்தி என்னை கவர்ந்தார்அவரது மக்கள் சக்தி இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அவர் சொன்ன தனி மனித முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு எனக்குள் வந்தது. அவர் எழுதிய புத்தகங்களை தேடித்தேடி படித்தேன். இதற்காக கன்னிமரா நூலகத்திற்குச் சென்று நாள் கணக்கில் உட்கார்ந்து படித்த அனுபவமும் உண்டு.
அந்த நேரத்தில்தான் மக்கள் சக்தி இயக்கம் சார்பில், 'நம்பு தம்பி நம்மால் முடியும்' என்ற தலைப்பில் சென்னை மயிலாப்பூரில் முதல் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நான் தியாகராய நகரின் பொருளாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பனகல் பார்க்கில் சந்திப்புக் கூட்டம் நடத்துவதுஉறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு நானா தெருவை குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்வது, சென்னை மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் நேரத்திற்கு வருகிறதா என கணக்கெடுத்து அதிகாரிகளிடம் அளித்து பேருந்து சேவையை சரிசெய்வது என இப்படிப் பல வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்தோம். இப்படியாக ஆரம்பித்தது தான் எனது சமூகம் சார்ந்த சிந்தனையும், அதனை யொட்டி அமைந்த எனது செயல்பாடும்.
திருமணத்திற்குப்பிறகு உங்களது சேவை எப்படி அமைந்தது? இளைஞர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் எண்ணம் எப்படி வந்தது?
எழுத1989 இல் எனக்கு திருமணம் நடைபெற்றதுதிருமணத்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. சொல்லப் போனால், குடும்பத்தில் எனக்கு நல்ல ஆதரவே கிடைத்தது. அந்த நேரத்தில்தான் எனது முதல் கணினியை ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கி அதில் நான் படித்த புத்தகங்களில் இருந்து எடுத்த குறிப்புகளை எல்லாம் அச்சடித்து தொகுத்து தகவல்களாகச் சேமித்து வைத்தேன்.
நல்லதன்முனைப்பு, சுயமுன்னேற்றம், இளைஞர் நலம், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நான் சேகரித்த கருத்துகளைத் தொகுத்து வைக்க ஆரம்பித்தேன். இப்படி இதுவரை நான் சுமார் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன்.
பின்னர் இதனை வைத்துக்கொண்டு இளைஞர்களுக்கான தன் முனைப்பு பயிற்சிகளை எடுக்க ஆரம்பித்தேன். இப்படி பயிற்சி எடுக்க என்னைத் தூண்டியவர் எனது மாமா மகன் விஜயகுமார் தான். அவரும் என்னைப்போல், எம்.எஸ்.சி சைக்காலஜி படித்திருந்ததால் பயிற்சியளிப்பது குறித்து
எனக்கு பரிந்துரைத்தார். அதுவும் ஒரு சிறந்த சிந்தனையாக இருந்ததால் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தன்முனைப்பு பயிற்சி களை எடுக்க ஆரம்பித்தேன். தொழில் செய்யும் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளையும் வழங்க ஆரம்பித்தேன். முதலில் பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் எனது பயிற்சி வகுப்பைத் தொடங்கினேன்.
உங்கள் தலைமுறை இளைஞர்களுக்கும், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், இண்டர்நெட், ஃபேஸ்புக், டிவிட்டர் என்ற இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர்களுக்கு இது போன்ற பயிற்சிகள் தேவையா?
கண்டிப்பாகத் தேவை. ஏனெனில் இன்றைக்கு அவர்களை திசை திருப்பும் அவாகளை திசை திருப்பும் எத்தனையோ இடர்பாடுகள் நாள்தோறும் அவர்களைச் சூழ்ந்து இருக்கின்றன. இந்த சூழலில் இருந்து சிலர் மட்டுமே தங்களைத் தாங்களே தகவமைத்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். ஆனால் பெரும்பாலானோரின் நிலை அப்படி இல்லை. இவற்றைத் தாண்டி வெளியில் வந்து சமூகத்தில் நல்ல மனிதராகமதிப்புமிக்க மனிதராக அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள திசைகாட்டும் கருவியாய் இதுபோன்ற பயிற்சிகள் தேவை.
குறிப்பாக நமது இன்றைய சமூகச் சூழல் எப்படி இருக்கிறது? நமது பாரம்பரியம் மிக்க பழக்க வழக்கங்களை இன்று மறந்துவிட்டோம்வாழும் காலத்தில் பொழுதுபோக்கவே அதிக நேரத்தை செலவழிக்கிறோம். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களும் அதிகம் தொலைக் காட்சி பார்ப்பது, தொடர்களை ரசிப்பது என தங்களது பொன்னான நேரத்தை தொலைத்து விடுகின்றனர்.
இதனால் வீட்டில் சுமூக உறவு நிலை மறைந்து விடுகிறது. அன்பும், பாசமும், கடமையும் மறைந்துபோய் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி விடும் சூழல் ஏற்படுகிறது. இதேபோல் தான் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நிலையும் இருக்கிறது.
எப்போது பார்த்தாலும் கையில் செல்பேசியை வைத்துக்கொண்டு அதில் தடவிக்கொண்டே செல்வது, அதிலுள்ள விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளால் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்றே உணராமல் இருக்கின்றனர். இதனால் தங்களது மதிப்பு மிக்க நேரமும், உழைப்பும் வீணடிக்கப்படுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லைஇதனை கருத்தில் கொண்டு தான் 33 ஆண்டுகள் பணியாற்றிய தேனா வங்கியின் வேலையை 2011இல் உதறித்தள்ளிவிட்டு திறன் மேம்பாட்டுப்பயிற்சியை முழுநேரப் பணியாக எடுத்துக் கொண்டேன்.
எப்போது பயிற்சியைத்தொடங்கினீர்கள்? உங்களது தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியால் பலன் அடைந்த நிறுவனங்கள் சில சிலவற்றைக்கூறமுடியுமா?
எனது பயிற்சியை 1999 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கினேன். பயிற்சியில் முக்கியமாக நேர்மறை சிந்தனைதான் இருக்கும். இது சமூக சிந்தனையை இளைஞர்களிடம் தூண்டிவிடும். அந்த வகையில் தான் எனது பயிற்சித் திட்டதை வகுத்து செயல்பட்டுவருகிறேன். இதுவரை இந்த சேவையில் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன்.
1500க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்பு களை நடத்தியிருக்கிறேன். அண்ணா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம், கலசலிங்கம், மதர்தெரசா உள்ளிட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் வகுப்புகள் எடுத்திருக்கிறேன். பொறியியல் கல்லூரிகளிலும் சென்று மாணவர்களுக்கு பயிற்சி தந்திருக்கிறேன்.
இதுதவிர 72 கார்பரேட் நிறுவனங்களுக்குச் சென்று அங்குள்ள பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வகுப்புகளை வழங்கியுள்ளேன். இதேபோல் ஆழ் மனதின் அற்புத சக்தியையும் உணரும்படி, பல்வேறு ஊர்களுக்குச் சென்று க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை எடுத்திருக்கிறேன்.
தொழில் சார்ந்த நிறுவனங்களுக்குச் சென்று கார்ப்பரேட் டிரைனிங் முறையிலான பயிற்சிகளையும் வழங்கி வருகிறேன். இதில் குழுமேலாண்மை, தலைமைப்பண்புகள், மாறுதல் மேலாண்மை, நேர மேலாண்மை, தகவல் தொடர்பு, தனிமனித முன்னேற்றம், மனித உறவுகள், வாழ்வியல் தத்துவங்கள், சமூக வாழ்வியில் போன்ற தலைப்புகளில் வகுப்புகள் எடுத்து வருகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இது தவிர வேறு தளங்களில் உங்களின் செயல்பாடு அதாவது ஊடகம், புத்தக வெளியீடு இப்படி ஏதாவது உண்டா ?
அகில இந்திய வானொலி நிலையமான எஃப் எம் கோல்டு ஒலிபரப்பில் உரைவீச்சு வழங்கியிருக்கிறேன். ராஜ், வேந்தர், ஷாலினி போன்ற தொலைக்காட்சிகளில் தொடர் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வாழ்வியல் சிந்தனைகளை வழங்கியிருக்கிறேன். உரை வீச்சு கொண்ட அட்ராக்ட் மனி என்ற தலைப்பில் ஒரு குறுவட்டையும் வெளியிட்டிருக்கிறேன். தற்போது ஆளுமைச் சிற்பி என்னும் இதழில் பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் எனும் தலைப்பில் 173 மாதங்களாக தொடர் எழுதி வருகிறேன்.
குறிப்பாக இளைஞர்களைக் காட்டிலும் சிறுவர்களுக்கு பள்ளியிலேயே பயிற்சியை வழங்குவது சிறந்தது எனக் கூறுகிறீர்கள்இதற்கென தனியான திட்டங்கள் ஏதும் வைத்திருக்கிறீர்களா?
பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்பார்க் எனப்படும் மாணவர்களின் கற்றலை வளர்க்கும் விதத்தில் தினசரி கண்காணிப்பு நாட்குறிப்பையும் தயாரித்து வழங்கியிருக்கிறேன். இதனை பல்வேறு பள்ளிகளில் வாங்கி ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு அளித்து அவர்களின் கற்கும் திறனை வளர்த்து வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து சென்னையில் 4 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து இலவசமாக பயிற்சியளித்து வருகிறேன்.
தினசரி படிக்கும் பழக்கம், நேர நிர்வாகம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது போன்றவற்றை கற்றுத்தருகிறோம். இதில் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் அனுமதித்தால் மட்டுமே அங்கு சென்று பயிற்சிகள் வழங்க முடியும். இதில் என்ன குறைபாடு என்றால், ஆசிரியர்களே இது போன்ற பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் என்ன என்பதைப்புரிந்து கொள்வதில்லை.
எனினும் ஒரு சில பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் நம்மையும் நமது சமூகச் சிந்தனையையும் புரிந்து கொள்கிறார்கள்நிறைய பள்ளிகளில் இதுபோன்ற பயிற்சிகளை அளித்தால் உயர்கல்விக்குச் செல்லும் போது அறிவிற்சிறந்த மாணவர்களாக அவர்கள் திகழ்வார்கள் என்பது எனது எண்ணம்முக்கியமாக ஆசிரியர்கள், மாணவர்கள் ஒத்துழைப்பு இதில் இருந்தால், வருங்கால இளைஞர்களை இந்தியாவின் வலிமை மிக்க தூண்களாக நிச்சயம் உருவாக்கலாம்.
இவரிடம் பயிற்சி பெற விரும்பும் பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெறலாம்.
ஏ.சண்முக சுந்தரம், நெசப்பாக்கம், சென்னை - 600 078. செல்பேசி : 9840485595