இந்தியாவில் டயர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத்திகழும் சியட் நிறுவனம், இந்திய டிரக்குகளுக்கான புதிய நீடித்து உழைக்கக் கூடிய நல்ல மைலேஜ் தரக்கூடிய எக்ஸ் 3 வகை டயர்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டயர்கள் வின்லோட் எக்ஸ்3-4, வின்மைல் எக்ஸ் 3.டி, வின் சூப்பர் எக்ஸ் 3-டி மைல் எக்ஸ்எ ல் எக்ஸ்-ஆர் மற்றும் ராக் மேக்ஸ் எக்ஸ் 3 இந்த டயர்கள் 3 ரேடியல் டயர்கள் மற்றும் 2 பயாஸ் டயர்களை உள்ளடக்கியதாகும். டயர் அழுத்தமான காலகட்டத்திலும் சீரான நிலையை வழங்குதல், மைலேஜ், பல்வேறு நிலப்பரப்புகளில் தடையின்றி செல்லுதல், வலுவான பிடி, நீண்ட ஆயுள் என ஒவ்வொரு டயருக்கும், அதற்கான தனித்துவம் மிக்க தன்மையோடு இந்த டயர்கள் உள்ளன.
-மும்பையில் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அர்னாப் பானர்ஜி அறிமுகம் செய்து வைத்தார்.
சியட் எக்ஸ் 3 வகை டயர்கள் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட சியட் ஷோரூம்கள், சியட் டிரக் சேவை மையங்கள் மற்றும் சியட் டீலர்களிடம் கிடைக்கும். ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் 1979)சின் முதன்மை நிறுவனமான சியட் 1958-ல் துவக்கப்பட்டது.
- என்.வி.என்.