“எங்கள் குட் லைஃப் கடலை மிட்டாய் தனிச்சுவை, தனி மணம், தனித்துவமான குணம் கொண்டது என்பதற்கு கடல் கடந்த நாட்டில் இருந்து கிடைத்திருக்கும் வர வேற்பே உதாரணம் எனப் பெருமை டன் குறிப்பிட்டார். அதன் நிறுவனரும் உரியமையாளருமான திரு .கரிகாலன் . நிறு வனத்தின் பெயர் நேச்சுரல் ஹெல்த் ஃபுட். அதை உண்மையென்றே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம் அவரின் தயாரிப்பான கடலைமிட்டாய். கருப்பட்டி கடலை மிட்டாய், நிலக்கடலை சோன் பப்டி இவற்றைச் சுவைத்த வாசகர் ஒருவர் நம்மிடம் தெரிவிக்கப் போய் தான் நாமும் அவரைத் தொடர்பு கொண்டோம். தன்னைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் தனது தயாரிப்புகள் பற்றி நமக்கு விளக்கமாகத் தெரிவித்தார் கரிகாலன். எல்லா தொழிகளைப் பற்றியும், அதன் அடிப்படை செயல்பாடுகள், நிர்வாகம், விற்பனை சார்ந்த பல நிலைகள் பற்றியும் முழுமையாக அறிந்து கொண்டேன்.
தரமான மூலப்பொருட்கள்:
அப்படி நான் நன்றாக அறிந்து கொண்டு தேர்ந்தெடுத்த தொழில் கடலை மிட்டாய் தயாரிப்புதற்குக் காரணம் கடலை மிட்டாய்க்கு (King of body fit) தரும் அரசன் என்ற சிறப்புப் உண்டு. எளிய தமிழில் சொல்லப்போனால் உடலைக் காக்கும் கடலை மிட்டாய்' எனலாம். அதனால் தான் தமிழகத்தில் மதிய உணவுக்குப் பின் கடலை மிட்டாயை பலர் தேடி உண்ணும் பழக்கம் உண்டு. சீரணத்திற்கும், உடலின் இயல்பான தன்மையைப் பாதுகாக்கும் கடலை + வெல்லம் சேர்ந்த கடலை மிட்டாய்கே உரிய சிறப்புக் குணம். சுமார் 2 ஆண்டு காலம் கடலை மிட்டாய் தயாரிப்பு சார்ந்த பல நிலைப் பயிற்சிகளை அனுபவப் பூர்வமாக அறிந்த நான், 2012 ஆம் ஆண்டு “குட் லைப்” (Good Life) என்ற பிராண்ட் பெயரில் கடலை மிட்டாய் தயாரிப்பில் இறங்கினேன். எனது நிறுவனமான 'நேச்சுரல் ஹெல்த் ஃபுட் நிறுவனத்தை எங்கள் ஊரான சங்க கிரியிலேயே தொடங்கினேன். அதற்குக் காரணம் காவிரி நதி பாயும் எங்கள் ஊர் மண் வளமும், விளைச்சலில் சுவை வளமும்